ஜூன் 1 முதல் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டம்!- மத்திய அமைச்சர் அறிவிப்பு – AanthaiReporter.Com

ஜூன் 1 முதல் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை’ திட்டம்!- மத்திய அமைச்சர் அறிவிப்பு

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் வரும் ஜூன் மாதம் நாடெங்கும் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மக்களவையில் இதைத் தெரிவித்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், இதனால் கோடிக் கணக்கான தினக்கூலிப் பணியாளர்கள் உள்பட அனைவரும் பலன் பெறுவார்கள் என்றார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் குடிமக்கள் அனைவரும் நாட்டின் எந்த இடத்திலும் உள்ள நியாய விலைக் கடைகளில் இருந்து உணவுப் பொருள்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் அல்லது ஆதார் மூலம் அடையாளம் கண்டறிந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். இத்திட்டத்தை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு தேவையான செயல்திட்டத்தை உருவாக்க மற்றும் சர்வதேச தரத்துக்குத்  என்று சொன்னதும் குறிப்பிடத்தக்கது.