நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் அப்ரெண்டிஸ் ஆஃபர்! – AanthaiReporter.Com

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் அப்ரெண்டிஸ் ஆஃபர்!

இந்திய அணுசக்தி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குவது தான் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் எனப்படும் என்.பி.சி.ஐ.எல்., நிறுவனமாகும்.குஜராத்தின் கக்ரபாரில் இத்தகைய கிளை நிறுவனம் அமைந்துள்ளது. அணுசக்தியை உபயோகித்து மின்சாரம் தயாரிப்பதில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரெண்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 90 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: பிட்டரில் 25, மெஷினிஸ்டில் 5, எலக்ட்ரீசியனில் 25, டர்னரில் 5, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்கில் 10, பாசாவில் 5, வெல்டரில் 5, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 10ம் சேர்த்து மொத்தம் 90 இடங்கள் காலியாக உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 14 முதல் 24 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 
தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஐ.டி.ஐ., படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Manager Nuclear Power Corporation of India Limited. Kakrapar Gujarat Site Pin-394651

கடைசி நாள் 
: 30.3.2019

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு