தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1,024 மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ்! – AanthaiReporter.Com

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1,024 மழலையர் பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் ஏராளமான மழலையர்கள் பள்ளிகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும், அங்கே அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அதைத் தடுக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பாலசுப்பிரமணியம் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசா ரணைக்கு வந்தபோது மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதி முறைகள் வகுக்கப்போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு வகுக்கப்படும் புதிய விதிமுறைகளை அரசு இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் உத்தரவிட்டபடி, அரசு இணையதளத்தில் மழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன.

edu aug 11

இதனிடையே தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 1,024 மழலையர் பள்ளிகளிடம் விளக்கம் கேட்டு, தொடக்க கல்வி இயக்குனநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 சதுர அடி இருந்தால் ஒரு குழந்தைக்கான அட்மிஷன் என்பது மழலையர் பள்ளுகளுக்கான விதிமுறை. அதன் அடிப்படையில் தொடக்க கல்வி இயக்குனரகத்திடம் இதுவரை 6,516 பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்துள்ளன.

அதில், சென்னையில் 215 பள்ளிகள் உட்பட 1,024 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க மறுத்து, தொடக்க கல்வி இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், பல பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பித்து வருவதாகவும், கல்வித்துறை அதிகாரிகளின் ஆய்வுக்குப்பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது