வெட்டி வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதில் இருந்து விலக வேண்டுமா?

வெட்டி வாட்ஸ் அப் குழுக்களில் இணைவதில் இருந்து விலக வேண்டுமா?

வாட்ஸ் அப் என்பது உலகம் முழுக்க உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் 1.3 பில்லியன் மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ் அப் ஆகியிருக்குது. நம்ம நாட்டிலே மக்களவை & இடைத்தேர் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மக்களிடம் தங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்ல அரசியல் கட்சிகள் வாட்ஸ்அப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில் விருப்பமில்லாத குழுக் களில் ஒருவர் இணைக்கப்படுவதை தடுக்க வாட்ஸ்அப் புதிய வசதியை அறிமுகப்படுத்திடுச்சு.

ஆமாமுங்கோ உங்க அனுமதியில்லாம இனிமே உங்களை தூங்கும்போது கட்டிலோடு தூக்கிட்டு போய் எந்த குருப்லேயும் சேர்க்க முடியாது இனிமே வாட்ஸப்பில.

அதுக்கு நீங்க The new feature can be enabled through the messaging app’s settings by selecting ‘Account’, then ‘Privacy’, then ‘Groups’. அதுல நோபடினு கொடுத்தா சேர்க்கனும்னு நினைக்கிறவங்க உங்க கான்டக்டை ஆட் பண்ணியவுடன், ஓகே உங்க விருப்பத்தை சம்பந்தபட்ட கான்டக்டிடம் அனுமதி பெற செய்தி அனுப்பியிருக்கிறேன்னு சொல்லும்,

கூடவே நீங்க யாரை ஆட் பண்ண விரும்புறீங்களோ அவங்களுக்கு தனி செய்தி போகும், இன்னார், இன்னார் குருப் உங்களை இந்த குருப்பில் சேர்த்துகொள்ள விருப்பம் தெரிவுத்துள்ளது, உங்களுக்கு சம்மதமா என்று…………அதுபோக இதற்க்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கும்…

ஆக இனிமே கன்டமேனிக்கு யாரையும் வாட்ஸப்பில சேர்க்க முடியாது.

error: Content is protected !!