நேரில் சியர்ஸ் சொல்லலாமா! – கோவா முதல்வ்பருக்கு பெண் எழுத்தாளர் அழைப்பு – AanthaiReporter.Com

நேரில் சியர்ஸ் சொல்லலாமா! – கோவா முதல்வ்பருக்கு பெண் எழுத்தாளர் அழைப்பு

.கோவா முதல்வா் மனோகா் பாரிக்கரி ன் சா்ச்சைக்குரிய பேச்சைத் தொடா்ந்து பீா் குடித்துக் கொண்டே சந்திக்கலாமா என்று டெல்லி பெண் எழுத்தாளா் மனோகா் பாரிக்கருக்கு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

கோவா முதல்வா் மனோகா் பாிக்கா் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவா் கூறுகையில், கோவா மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாக விளங்குகின்றது. இதனால் மாநிலத்தில் போதைப்பொருள் சந்தையும் பெருகி விட்டது. தற்போது மாநிலத்தில் பெண்கள் கூட பீா் குடிக்கின்றனா். இது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது என்று தெரிவித்தார்்.

முதல்வரின் இந்த கருத்து மிகவும் சா்ச்சையை கிளப்பியது. மேலும் டுவிட்டாில் #GirlsWhoDrinkBeer என்ற ஹேஷ்டேக் மிகவும் பிரபலம் பெற்றது.

இந்நிலையில், டெல்லியைச் சோ்ந்த பெண் எழுத்தாளா் ஒருவா் பீா் சாப்பிட்டுக் கொண்டே உங்களை சந்திக்கலாமா என்று கோவா முதல்வா் மனோகா் பாிகருக்கு அழைப்பு விடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெண் எழுத்தாளரான கோட்டா நீலிமா, மனோகா் பாரிகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை தனது ட்விட்டா் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் வருகின்ற மார்ச்-5ம் தேதி நானும், என்னைப்போன்றே இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய ஆண்களும், பெண்களும் கோவா வருகிறோம். அன்று மாலை 5 மணிக்கு உங்களது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ உங்களைச் சந்தித்து ஒரு பீா் அருந்திக்கொண்டே உங்களுடன் இது தொடா்பாக பேச விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்