பாரிசின் புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து!

பாரிசின் புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து!

உலகம் முழுவதும் பிரெஞ்சு கட்டிடக்கலைகள் மிக பிரசித்தம். இங்கிருந்து ‘கொப்பி’, செய்யப்பட்ட பல கட்டிடங்களை உலகின் பல்வேறு நாடுகளில் நீங்கள் காணலாம்.. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய இடங்களில் ஒன்றாகக் கருதப்படுவதும், அந்நாட்டின் அடையாளமாகவும் விளங்கும் 850 வருட பாரம்பர்யம் மிக்கதும் . யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிரசித்துப் பெற்ற ஒரு  தேவாலயத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் மேற்கூரை மற்றும் பிரதான ஊசி கோபுரம் இடிந்து விழுந்தது. இந்தத் தேவாலயத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 13 மில்லியன் மக்கள் வருகின்றனர். இதில் ஈஃபில் கோபுரத்தைக் காண வரும் மக்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்தத் தேவாலயம் 12 -ம் நூற்றாண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டு உலகப் போரின்போதும் எந்தச் சேதத்தையும் இந்தத் தேவாலயம் எதிர்கொள்ளவில்லை.

பிரான்ஸ் தலைநகர், பாரிசில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரே டேம் கதீட்ரல். பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று முன் தினம் மாலை 5.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் இந்த தேவாலயத் தின் மேற்கூரை பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்து மேற்கூரை இடிந்து விழுந்தது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடினர். குறிப்பாக பிரதான சின்னமாக கருதப்படும் ஊசி கோபுரத்தை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அந்த கோபுரம் முற்றிலும் எரிந்து இடிந்து விழுந்தது.

ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானது அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ விவரங்கள் வெளியாகவில்லை.

அதே சமயம் தேவாலயத்தில் நூற்றாண்டுகள் கடந்த கலை வடிவங்கள் இருக்கிறது, அதை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் உள்ளனர். எனினும் புனரமைப்பு பணிகளுக்காகக் கடந்த வாரம் முக்கியமான 16 செப்பு சிலைகள் அகற்றப்பட்டன. அதனால் அவை அனைத்தும் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளன. மேலும், கட்டடத்தின் கூரை தவிர்த்து மற்றப் பகுதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் ஃபிரான்கோயிஸ் ஹென்றி, இந்தத் தேவாலயத்தை சரிசெய்ய தானும் தன் குடும்பத்தினரும் 100 மில்லியன் யூரோக்களை வழங்க வுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 780 கோடி ரூபாய் ஆகும். பலர் தற்போது தேவாலயத்தைச் சரி செய்யும் பணிக்கு நிதி வழங்க முன்வந்துள்ளனர்.

இந்தத் தேவாலயத்துக்கு ஒவ்வோர் ஆண்டும் சுமார் 13 மில்லியன் மக்கள் வருகின்றனர். இதில் ஈஃபில் கோபுரத்தைக் காண வரும் மக்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இந்தத் தேவாலயம் 12 -ம் நூற்றாண்டு கட்டப்பட்டுள்ளது. இரண்டு உலகப் போரின்போதும் எந்தச் சேதத்தையும் இந்தத் தேவாலயம் எதிர்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!