மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது சுப்ரீம் கோர்ட்!

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது  சுப்ரீம் கோர்ட்!

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த எவரொருவருக்கும் அனுமதி அளிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு சென்னை மெரினா கடற்கரையில் ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்தது. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கென்று சில இடங்களை தமிழக அரசு தீர்மானித்துள்ளது. அந்த இடங்களில் அரசு அனுமதி பெற்று ஆர்ப்பாட்டங்களை நடத்திக்கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.

இந்நிலையில் மெரினாவில் ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அய்யாக்கண்ணு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மெரினாவில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி அளிக்க முடியாது. குறிப்பாக மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கும் தமிழக அரசின் முடிவில் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

error: Content is protected !!