இந்திய அளவில் சுகாதாரத்தில் முதலிடம் பெற்ற விருதுநகர் ; நிதி ஆயோக் தகவல்!

இந்திய அளவில் சுகாதாரத்தில் முதலிடம் பெற்ற விருதுநகர் ; நிதி ஆயோக் தகவல்!

ஜெ. மறைவுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய எடப்பாடி & கோ மீது தமிழக மக்களுக்கு போதிய நம்பகத்தன்மை இன்னும் ஏற்படவில்லை என்று ஊடகங்களில் சில சொல்லி வரும் சூழ்நிலையில் சுகாதாரம், ஆரோக்கியம், விவசாயம், நீராதாரம், நிதி, திறன் மேம்பாடு அடிப்படை உள் கட்டமைப்புகள் போன்றவற்றில் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் நிதி ஆயோக்கின் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வளர்ந்து வரும் மாவட்டங்கள் திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். சமுக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதன்படி நாடு முழுவதும் 115 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.

இதனையடுத்து அந்த மாவட்டங்களை கண்காணிக்கும் நோக்கில் சுகாதாரம், ஆரோக்கியம், விவசாயம், நீராதாரம், நிதி, திறன் மேம்பாடு அடிப்படை உள் கட்டமைப்புகள் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை நிதி ஆயோக் அமைப்பு கணக்கெடுப்பு நடத்தியது. இதில் 111 மாவட்டங்கள் கலந்து கொண்டன.

இதில் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் ஒடிசா வின் நவுபாடாவுக்கும் மூன்றாமிடம் உத்தரப் பிரதேசத்தின் அவுரங்காபாத்திற்கும் கிடைத்துள்ளது. மிகவும் கீழ்நிலையில் பின்தங்கி உள்ள 20 மாவட்டங்களில் பீகாரின் 9 மாவட்டங்களும் ஜார்கண்டின் 5 மாவட்டங்களும் ஒடிசாவில் 3 மாவட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

அதே சமயம் ஜார்கண்ட் மாநிலத்தில் உள் பாகூர், அசாமின் ஹைலகாண்டி, ஜார்கண்டின் சத்ரா ஆகிய மாவட்டங்கள் மிகவும் கீழ்நிலையில் பின்தங்கி உள்ள 20 மாவட்டங்களின் பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது.

error: Content is protected !!