நியூ நியூஸ் ஆப்ஸ்- களுக்கு செம ரெஸ்பான்ஸ்! – AanthaiReporter.Com

நியூ நியூஸ் ஆப்ஸ்- களுக்கு செம ரெஸ்பான்ஸ்!

கூகுள் ப்ளே ஸ்டோரில் கிட்டத்தட்ட 3 மில்லியனுக்கும் அதிகமான  ஆப்ஸ்கள் குவிந்தபடி கிடக் கின்றன. இதில் நமக்கு தேவையானவை என்று சில ஆப்ஸ் மட்டுமே ரெகுலரா பயன்படுத்துவோம். இதில் ஆன் லைன் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட வாட்ஸ் அப் பேஸ்புக், மெசென்ஜர், யூ டியூப், ஆகிவற்றை தவிர்த்து ஏனைய ஆப்ஸ்களைக் காட்டிலும் செய்தி குறித்த ஆப்கள் தொடர்ந்து பிரமாதமான வளர்ச்சியை அடைந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதால் தினமும் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக மொபைல் ஆப்ஸ்.,களில் மூழ்கி உள்ளோரின் எண்ணிக்கையும் எகிறிக் கொண்டே போகிறது. மிக குறைந்த அளவாக 2 மணி நேரம் மொபைல் ஆப்சில் செலவிடுகிறார்கள். இதில் ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்களையே நம் இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொபைல் ஷாப்பிங் ஆப்ஸ்களை மட்டும் சரா சரியாக ஒரு மாதத்தில் 90 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள் என்றெல்லாம் முன்னரே தகவல் வெளியானது. இதனிடையே ஷாப்பிங், வீடியோ மற்றும் கேம்ஸ் போன்ற பிரிவுகளில் மொபைல் ஆப்ஸ் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுக்குள் 60 விழுக்காடு உயரும் என்றும் இதில் செய்தி சார்ந்த ஆப்கள் அதிகம் எனவும் மொமேஜிக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்தான் ஆய்வறிக்கையில், “கடந்த சில காலாண்டுகளில் டேட்டா விலைகள் குறைந்து உள்ளதாலும், இணைய வேகம் உயர்ந்துள்ளதாலும் இந்தியாவில் ஷாப்பிங், வீடியோ மற்றும் கேம்ஸ் ஆகிய பிரிவுகளில் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை கடும் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வளர்ச்சி 2019ஆம் ஆண்டு வரையிலிருக்கும். மேலும் இப்பிரிவில் 60 விழுக்காடு வளர்ச்சி ஏற்படும் என்று எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

சுமார் 20 லட்சம் மொபைல் பயன்பாட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், புதிய செயலிகளுக்கான தேவை 94 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், சமூக ஊடக செயலிகளின் பயன்பாடு 80 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், கேம்களின் பயன்பாடு 52 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பத்து மொழிகளில் பெருமளவில் செய்திகள் தயாரிக்கப்படுகின்றன. இச்செய்திகளை அனைத்து வயது வரம்பிலுள்ளவர்களும் படிக்கின்றனர். மற்ற செயலிகளை விட செய்தி செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது