புது வருஷப் பிறப்பில் இந்தியாவில்தான் அதிக குழந்தைங்க பிறந்திருக்கு! – யுனிசெஃப் தகவல்!

புது வருஷப் பிறப்பில் இந்தியாவில்தான் அதிக குழந்தைங்க பிறந்திருக்கு! – யுனிசெஃப் தகவல்!

புத்தாண்டான ஜனவரி 1ம் தேதி உலக நாடுகளில் முதலிடம் பிடிக்கும் நோக்கில் இந்தியாவில் 67 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளன.

உலகம் முழுவதும் புத்தாண்டு தினத்தன்று பிறந்த குழந்தைகள் குறித்து யுனிசெஃப் அறிக்கை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறது.  அதன்படி உலகம் முழுவதும் புத்தாண்டு துவக்கத்தில் ஒட்டு மொத்தமாக 3 லட்சத்து 92 ஆயிரம் குழந்தைகள் 8 நாடுகளில் பிறந்துள்ளன.

இதில் நம்ம இந்தியாவில் அதிகபட்சமாக 67 ஆயிரத்து 285 குழந்தைகளும், அதைத் தொடர்ந்து சீனாவில் 46 ஆயிரத்து 299 குழந்தைகளும், நைஜீரியாவில் 26 ஆயிரத்து 39 குழந்தைகளும், பாகிஸ் தானில் 16 ஆயிரத்து 787 குழந்தைகளும், இந்தோனேசியாவில் 13 ஆயிரத்து 20 குழந்தை களும் பிறந்துள்ளன. அமெரிக்காவில் 10 ஆயிரத்து 452 குழந்தைகளும், காங்கோவில் 10 ஆயிரத்து 247 குழந்தைகளும், எத்தியோப்பியாவில் 8 ஆயிரத்து 493 குழந்தைகளும் பிறந்துள்ளன. பிஜீ தீவில் முதலாவதாகவும், கடைசியாக அமெரிக்காவிலும் குழந்தை பிறந்துள்ளது.

இதனிடையே  2018ஆம் ஆண்டில் 25 லட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்துக்குள்ளாகவே இறந்து விட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. பெரும்பாலான குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்ததனாலும், சிக்கலான பிரசவம், தொற்று நோய்கள் ஆகியவை காரணமாகவும் உயிரிழந்து உள்ளன. 2018 மட்டுமின்றி ஆண்டுதோறும் 25 லட்சத்துக்கும் மேலான குழந்தைகள் இறக்கின்றன. எனினும் மருத்துவத் துறையில் ஏற்பட்ட சிறப்பான முன்னேற்றங்கள் காரணமாகப் பிறந்து ஒரு மாதத்தில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 47 சதவிகிதம் குறைந்துள்ளது என யுனிசெஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!