வாட்ஸ் அப் செயலி ஆடியோ ரெக்கார்டிங்கில் புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ் அப் செயலி ஆடியோ ரெக்கார்டிங்கில் புதிய வசதி அறிமுகம்!

வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் லாக்டு ஆடியோ ரெக்கார்டிங் (Locked Audio Recording) அம்சம் வந்திருக்குது.

வாட்ஸ்அப் ஆப்-பில் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்யும்போது மைக்ரோபோன் பட்டனை நீண்ட அழுத்தம் கொடுத்து பதிவு செய்ய வேண்டியிருந்தது. அழுத்தம் கொடுத்ததை விடுவித்த உடன் பதிவு செய்த ரெக்கார்டிங் அனுப்ப வேண்டிய நபருக்கு அனுப்பப்படும். இது கொஞ்சம் சிரமமான முறையாக இருப்பதாக வாட்ஸ்அப் பயனர்கள் கருதி வருகின்றனர். ஏனெனில் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்யும்போது தவறுதலாக பேசி விட்டால், அவற்றை திருத்திக் கொள்ளவோ தவிர்க்கவோ இயலாது.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் பீட்டா பதிப்பில் லாக்டு ஆடியோ ரெக்கார்டிங் (Locked Audio Recording) என்ற புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியை இயக்க வேண்டுமெனில், வாட்ஸ்அப் திரையில் தெரியும் மைக்ரோபோன் பட்டனை 0.5 நொடிகளுக்கு அழுத்தி பிடிக்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, வாட்ஸ்அப்பில் லாக் மைக்ரோபோன் பொத்தான் தெரியும். இதனை ஸ்வைப் செய்து லாக் ரெக்கார்டிங் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இவ்வாறு ஆடியோ ரெக்கார்டிங்கை செயல்படுத்தியதும், மைக்ரோபோன் பட்டனை அழுத்தாமல் சாட்டிங் திரைக்கு யூசர் இன்டர்ஃபேஸ் எடுத்து செல்லப்படும்.

மேலும், இனி வரும் வாட்ஸ்அப் அப்டேட்களில் ஆடியோ பதிவுகளை அனுப்பும் முன் ஒருமுறை கேட்கும் வசதியும் அளிக்கப்படும் என்று தெரிகிறது. வெகுவிரைவில் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுது.

Related Posts

error: Content is protected !!