வந்தாச்சுன்னு சொல்லு.. மேகி நூடுல்ஸ் இன்னும் நாலு எக்ஸ்ட்ரா டேஸ்டோட வந்தாச்சுன்னு சொல்லு!

வந்தாச்சுன்னு சொல்லு.. மேகி நூடுல்ஸ் இன்னும் நாலு எக்ஸ்ட்ரா டேஸ்டோட வந்தாச்சுன்னு சொல்லு!

நெஸ்லே இந்தியா நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், காரீயம், மோனோ சோடியம் குளுட்டாமேட் ஆகிய ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களை பல்வேறு மாநிலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தின. ஆய்வில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. இதனால், நெஸ்லேயின் ஒன்பது வித மேகி நூடுல்சுகளையும் “மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை” என்று அறிவித்தது மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம். இதையடுத்து இந்த மேகி வகைகள் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், கோவாவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம், மேகி நூடுல்ஸ் மாதிரிகளை மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆய்வு செய்ய அனுப்பியது. இந்த ஆய்வின் முடிவில், மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவுதான் என தெரியவந்திருக்கிறது.. உணவு பாதுகாப்பு விதிகள் 2011 ன் படி, அனுமதிக்கப்பட்ட அளவில்தான் ரசாயன பொருட்கள் கலந்துள்ளன என்று உறுதியானது. மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று தற்போதைய ஆய்வு தெரிவிப்பதால், அதன் மீதான தடை நீக்கப்பட்டு இப்போது பல்வேறு புது பேக்கிங்குகளில் மறுபடியும் விறபனைக்கு வந்து விட்டது.

maggi aug 18

ஆம் நெ.ஸ்லே இந்தியா நுகர்வோருக்கு தனிப்பட்ட உணவு அனுபவங்களை வழங்குவதை தொடர்கிறது.நிறுவனம் மேகி நூடுல்ஸ் போர்ட்ஃபோலியோவில் புதிய சேர்க்கைகளை அறிமுகபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறது.அவை மேகி ஹாட் ஹெட்ஸ், மேகி நோ ஆனியன் நோ கார்லிக் மசாலா ஆகும்.கப் ஓ நூடுல்ஸ் மேகி கப்பா மசாலா மற்றும் மேகி கப்பா சில்லி சவ் மேலும் புதிய அறிமுகமான மேகி ஹாட் ஹெட்ஸ் கப்பா ஆகியவற்றின் மூலம் திரும்ப வருகின்றது.

மேகி நூடுல்ஸ் புகழ் மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் நம்பிக்கை பற்றி கூறிய நெஸ்லே இந்தியாவின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் சுரேஷ் நாராயணன் ”’மேகி நூடுல்ஸ் ஆனது இந்திய நுகர்வோர் இதயங்களிலும் மனங்களிலும் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளது.நெஸ்லேவின் சுவைகள் பற்றிய விரிவான அறிவு மதிக்கும் உணர்வு ஆகியவற்றில் சீராக இருந்து வருகிறோம்,எங்களது தொழில்நுட்பம் மற்றும் ஊட்டசத்து பற்றிய அறிவியல் ஆகியன வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும். மேகி ஹாட் ஹெட்ஸ், மேகி கப்பா மற்றும் மேகி நோ ஆனியன் நோ கார்லிக் மசாலா ஆகியன இந்த ஆர்வத்தின் விளைவு ஆகும் இவற்றை அறிமுகபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்’.என்றார்.

மேகி ஹாட் ஹெட்ஸ் என்பது மேகி நூடுல்ஸின் துணை பிராண்ட் ஆகும் இது சுவை மற்றும் காரத்தை விரும்புவர்களுக்கானது. மேகி ஹாட் ஹெட்ஸ் முன் எப்பொழுதும் இல்லாத 4 தனிப்பட்ட சுவைகளால் ஆன மசாலாக்கலால் ஆனது. டிலிசியஸ்&மைல்டி ஹாட் பெரி பெரி,ஸ்மோக்கிங் ஹாட் பார்பிக்யு பெப்பர்,யம்மி சில்லி சிக்கன் மற்றும் ரா ஆசம் ஆப் க்ரீன் சில்லி ஆகியன நூடுல்ஸில் வருகின்றன.தி பார்பிக்யு பெப்பர் மற்றும் பெரி பெரி வகைகள் மேகி ஹாட் ஹெட்ஸ் கப்பா நூடுல்ஸிலும் வருகின்றன.

தி மேகி நோ ஆனியன் நோ கார்லிக் மசாலா நூடுல்ஸ் ஆனியன் மற்றும் கார்லிக் விரும்பாதவர்களுக்கானது.

திரும்ப அறிமுகபடுத்தப்பட்ட கப் நூடுல்ஸ் வகைகள் மேகி கப்பா மசாலா மற்றும் மேகி கப்பா சில்லி சவ் ஆகும்.இந்த மசாலா வகைகள் கிளாசிக் மேகி மசாலா சுவையை தருகின்றன.சில்லி சவ் காரமான வகையாகும்.

மேகி ஹாட் ஹெட்ஸ் நூடுல்ஸ் 71 கிராம் பேக் இந்திய ரூபாயில் 20 முதல் 22வரை கிடைக்கும் மேகி நோ ஆனியன் நோ கார்லிக் மசாலா நூடுல்ஸ் 70 கிராம் பேக் இந்திய ரூபாயில் 15க்கு முதலில் குஜராத்,மும்பை மற்றும் கற்றவில் கிடைக்கும் மேகி கப்பா மசாலா மற்றும் கப்பா சில்லி சௌ இந்திய ரூபாயில் 40 க்கு 70 கிராம் பேக் மற்றும் மேகி ஹாட் ஹெட்ஸ் கப்பா நூடுல்ஸ் வகைகள் 70 கிராம் இந்திய ரூபாயில் 50 க்கு கிடைக்கும் இந்த வகைகளை ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய ஸ்நாப்டீல் உடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்” என்றார்.

இதனிடையே மேகி தடை செய்யப்பட்டபோதே, “நெஸ்லே பெரிய நிறுவனம். தான் உற்பத்தி செய்யும் மேகி மீதான தடையை தகர்த்து, மீண்டும் சந்தைக்கு வரும்” என்று பேசப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள். எப்படி ஆனாலும், முன்பு ஏன் தடை விதித்தார்கள், இப்போது எப்படி தடையை நீக்கினார்கள் என்பதை ஆய்வு செய்தவர்களும மத்திய அரசும் விளக்கவே இல்லையே என்றி பலரும் முணு முணுக்கிறார்கள்

Related Posts

error: Content is protected !!