நேபாளிகள், இந்திய ரூபாயில் மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யத் தடை!

நேபாளிகள், இந்திய ரூபாயில் மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யத் தடை!

நம் நாட்டிலுள்ள நேபாளிகள், இந்திய ரூபாயில் மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யக் கூடாது என்று நேபாள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் பாஜகவின் மோடி தலைமையிலான அரசு வெளியிட்ட உயர் மதிப்பு நோட்டுகளான ரூ.2000, ரூ.500, ரூ.200 ரூபாய்களுக்கு ஏற்கெனவே தடை விதித்து உத்தரவிட்டது. ஆனாலும் ரூ.100 மட்டுமே பயன்படுத்த அனுமதித்த நிலையில், இந்தியாவில் உள்ள நேபாள மக்கள், இந்திய ரூபா யில் மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது நேபாள அரசு. அதிலும் நேபாள மக்கள் ரொக்கப் பணமாகவோ, கிரெடிட், டெபிட் கார்டு களிலும் ரூ. ஒரு லட்சத்துக்கு அதிகமாகச் செலவு செய்ய முடியாது.

இதனால், இந்தியாவில் வசிக்கும் நேபாள மக்கள், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் வர்த்தக ரீதியாக, படிப்புக்காக வரும் நேபாள மக்கள், சேவைகள், பொருட்களைப் பெறுவதில் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும். மருத்துவ சிகிச்சையில் இருந்து மட்டும் இந்த உத்தரவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதால், அதைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்த மூத்த பொருளாதார அறிஞர்கள் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்புதான் நேபாளத்தில் சிக்கல் ஏற்படத் தொடங்கியது. அதனால்தான் எப்போதும் இல்லாத வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை நேபாள அரசு எடுத்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.

இது குறித்து நேபாள ரிசர்வ் வங்கியின் செய்தித்தொடர்பாளர் நராயன் பிரசாத் படேல் கூறுகையில்,“நேபாள அரசின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்கவும், வரவுச் செலவு சமநிலையின்மை பிரச்சனையைக் கையாளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பொருளாதார வல்லுநர் பாவுடல் கூறுகையில்,“பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் நேபாளத்தில் இருந்த இந்திய ரூபாயை திரும்பப் பெறுவது குறித்து இந்தியாவிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இதுவரை இல்லை. பெரும்பாலான நேபாள மக்கள் இந்திய பணமதிப்பில் சேமிப்புகளை வைத்திருந்தனர். ஆதலால், எதிர்காலத்தில் இந்தியாவின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே இந்த நடவடிக்கையாகும்” எனத் தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நேபாள, இந்திய அதிகாரிகள், பணமதிப்பிழப்பு நேரத்தில் நேபாளத்தில் இருக்கும் செல்லாத ரூபாய்கள் குறித்து பேச்சு நடத்தினர். இதற்கிடையே கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இந்தியாவில் புழங்கும் 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்த நேபாள அரசு திடீர் தடைவிதித்தது. இந்நிலையில், நேற்று நேபாள நாட்டு மக்களில் ஒவ்வொருவரும் இந்தியாவில் சென்று மாதத்துக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இந்திய மதிப்பில் செலவு செய்ய தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!