மோடியின் புதிய அமைச்சரவை : முழு பட்டியல்!

மோடியின் புதிய அமைச்சரவை : முழு பட்டியல்!

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி இன்று மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமானம் செய்து வைத்தரார். அவரை அடுத்து மத்திய அமைச்சராக ராஜ்நாத் சிங், அமித்ஷா, நித்ன் கட்காரி, டி.வி சதானந்த கவுடா, ரவி சங்கர் பிரசாத், சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி ராணி, நிரஞ்சன் ஜோதி, அர்ஜூன் ராம் மெக்வால், எஸ் ஜெய்சங்கர், ரமேஷ் போக்கரிய, பிரகாஷ் ஜவடேகர், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராம் விலாஸ் பாஸ்வான், முக்தார் அப்பாஸ் நக்வி, தர்மமேந்திர பிரதான், டி.வி சதானந்த கவுடா, ஜிதேந்திர சிங் பதவி ஏற்றனர்.  மொத்தம் 58 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். 25 பேர் கேபினட் அமைச்சர்களாக பதிவுயேற்றுள்ளனர். 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். 24 பேர் இணை அமைச்சர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்து முடிந்தபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மை பலம் பெற்றது . இதை அடுத்து இன்று நடந்த பதவியேற்பு விழாவில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தற்போது எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை அமைச்சர் பதவி என்ற விபரம் இதோ:

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் வென்ற பிரதமர் மோடி உட்பட 9 பேர் அம் மாநிலத்தில் இருந்து அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி, வி.கே.சிங் உள்ளிட்டோர் அதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக நிதின்கட்கரி, பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் உள்ளிட்ட 8 பேர் மகாராஷ்ட்ராவில் இருந்து மத்திய அமைச்சர்களாக தேர்வாகி உள்ளனர்.

பீகாரில் இருந்து ராம் விலாஸ் பஸ்வான், ரவிசங்கர் பிரசாத், கிரிராஜ் சிங், ஆர்.கே.சிங் உள்ளிட்ட ஆறு பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.

நரேந்திர சிங் தோமர், தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட 5 பேர் மத்திய பிரதேசத்தில் இருந்தும், நிர்மலா சீதாராமன், சதானந்த கவுடா உள்ளிட்ட 4 பேர் கர்நாடகாவில் இருந்தும் மத்திய அமைச்சர்களாக தேர்வாகியுள்ளனர்.

ராஜஸ்தான், குஜராத், ஹரியானா மாநிலங்களில் இருந்து தலா 3 பேரும், பஞ்சாப் மற்றும் மேற்குவங்கத்தில் இருந்து தலா 2 பேரும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர்.

புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களின் முழு பட்டியல்:

மத்திய அமைச்சரவை (கேபினட்) :

  1. நரேந்திர மோடி
  2. ராஜ்நாத் சிங்
  3. அமித் ஷா
  4. நிதின் கட்காரி
  5. சதானந்த கவுடா
  6. நிர்மலா சீதாராமன்
  7. ராம்விலாஸ் பாஸ்வான்
  8. நரேந்திர சிங் தோமர்
  9. ரவி ஷங்கர் பிரசாத்
  10. ஹர்சிம்ரத் கவுர் பாதல் (சிரோன்மணி அகாளி தளம்)
  11. தவார் சந்த் கெலாட்
  12. சுப்பிரமணியம் ஜெய்சங்கர்
  13. ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்
  14. அர்ஜுன் முண்டா
  15. ஸ்மிருதி இரானி
  16. டாக்டர் ஹர்ஷ்வர்தன்
  17. பிரகாஷ் ஜவடேகர்
  18. பியுஷ் கோயல்
  19. தர்மேந்திர பிரதான்
  20. முக்தார் அப்பாஸ் நக்வி
  21. பிரஹ்லாத் ஜோஷி
  22. மகேந்திர நாத் பாண்டே
  23. அரவிந்த் சாவந்த் (சிவசேனா)
  24. கிரிராஜ் சிங்
  25. கஜேந்திர சிங் ஷெகாவத்

தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் :

  1. சந்தோஷ் குமார் கங்கர்
  2. ராவ் இந்திரஜித் சிங்
  3. ஸ்ரீபத் நாயக்
  4. ஜிதேந்திர சிங்
  5. கிரெண் ரிஜிஜு
  6. பிரஹ்லாத் சிங் படேல்
  7. ராஜ்குமார் சிங்
  8. ஹர்தீப் சிங் புரி
  9. மன்சுக் எல். மாண்டவியா

இணை அமைச்சர்கள்:

  1. ஃபாக்கன் சிங் குலஸ்டே
  2. அஷ்வினி குமார் சௌபே
  3. அர்ஜுன் ராம் மேக்வால்
  4. ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங்
  5. கிரிஷன் பால் குஜார்
  6. தன்வே ரோசஹிப் தாதராவ்
  7. கிஷன் ரெட்டி
  8. புருஷோத்தம் ரூபலா
  9. ராம்தாஸ் அத்வாலே
  10. சாத்வி நிரஞ்சன் ஜோதி
  11. பாபுல் சுப்ரியோ
  12. சஞ்சீவ் குமார் பால்யன்
  13. தூதரே சஞ்சய் சம்ரோவ்
  14. அனுராஜ் சிங் தாக்குர்
  15. அங்காடி சுரேஷ் சன்னபசப்பா
  16. நித்தியானந்த் ராய்
  17. ரத்தன்லால் கட்டாரியா
  18. வி. முரளிதரன்
  19. ரேணுகா சிங் சாருதா
  20. சோம் பர்காஷ்
  21. ராமேஷ்வர் தெளி
  22. பிரதாப் சந்திரா சாரங்கி
  23. கைலாஷ் சவுத்ரி
  24. தேபாஸ்ரீ சவுதுரி

Related Posts

error: Content is protected !!