கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பரிசு! -அரவிந்த் சாமி பெருமிதம்!

கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பரிசு! -அரவிந்த் சாமி பெருமிதம்!

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் கார்த்திக் நரேன். அவரது இயக்கத்தில் வரவிருக்கும் இரண்டாவது படம் நரகாசூரன். இந்தப்படம் கௌதம் மேனன் தயாரிப்பில் தொடங்கப்பட்டது. படம் முடிந்த நிலையில் கௌதம் மேனன் இந்தப் படத்தின் பேரில் கடன் வாங்கிய நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை என கார்த்திக் நரேன் குற்றம் சாட்டினார். பின் இருவரும் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி வந்த நிலையில் இப்போது இப்படம் ஆகஸ்ட் மாத இறுதியில் திரைக்கு வரும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது.   இந்நிலை யில்  அரவிந்த் சாமி , கார்த்திக் நரேன், ஆத்மிகா, சந்தீப் கிஷன், இந்திரஜித் ஆகியோர் கலந்து கொண்ட இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் சந்தீப் கிஷன், “நான் எல்லாப்படத்தையும் மிகுந்த யோசனைக்குப்பின் தான் ஒப்புக்கொள்வேன். என் கேரியரில் கதை கேட்காமல் ஒப்புக்கொண்ட முதல் படம் நரகாசூரன். அதற்கு காரணம் அவரது துருவங்கள் பதினாறு படமல்ல அவரது அப்பாவின் நம்பிக்கையை அவர் காப்பாற்றிய விதம் தான். ஒரு சினிமாவை தம் மகனை நம்பி அவர் ஆரம்பித்த போது அதை அவர் நிரூபித்து காட்டி துருவங்கள் பதினாறை ஹிட்டாக மட்டுமல்லாமல் ஒரு மிக முக்கியமான படமாக மாற்றியிருந்தார். அவரால் ஒரு மோசமான படம் எடுக்க முடியாது என்ற நம்பிக்கையில் இந்தப்படத்தை ஒத்துக்கொண்டேன். அரவிந்த்சாமி சார் கூட நடிப்பதால் என் வீட்டில் முதல் நாளே படத்திற்கு கூட்டிப் போக சொன்னார்கள். என் வீட்டிலேயே அவருக்குத்தான் ரசிகர்கள் அதிகம். ஒவ்வொரு சினிமாவும் குழந்தை மாதிரி அதன் வளர்ப்பில் நிறைய பிரச்சனைகள் வரும் இந்தப் படத்திற்கும் வந்தது. அதையெல்லாம் தாண்டி இந்தப்படம் இப்போது ரிலீஸிற்கு தயாராகி யுள்ளது. என் வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும்படியான மிக முக்கியமான படமாக இது இருக்கும்” என்றார்.

கார்த்திக் நரேன் பேசுகையில், “ இந்தப்படம் வெளிவரக் காரணம் பத்ரி சார் தான். அவர் இல்லை யென்றால் இந்தப்படம் வெளி வந்திருக்காது. இந்தப்பட்டத்தை சரியாக முடிக்க ஆர்டிஸ்ட்டும், டெக்னீசியன்ஸும் தான். நான் இது சரி இது தவறு என்பதை மட்டும் தான் சொன்னேன். மொத்த வேலையையும் மற்ற எல்லோரும் தான் செய்தார்கள். அரவிந்த் சாமி சாரை மீட் செய்த போது எனக்காக கதையை மாற்றாதீர்கள் நீங்கள் உங்களுக்கு பிடித்த மாதிரி செய்யுங்கள் நான் அதில் வந்து பொருந்திக்கொள்கிறேன் என்றார். சந்தீப்பும் அப்படித்தான். அவர் தெலுங்கு படங்கள் நடிப்பவர் இந்தக்கதையை மாற்றச் சொல்வார் என நினத்தேன். ஆனால் புரிந்து கொண்டார். டெக்னீசியன்கள் அனைவரும் என் குடும்பம் மாதிரி தான். அவர்களால் தான் இந்தப்படம் சாத்தியமானது.

கௌதம் சார் என் முதல் படம் பார்த்து விட்டு நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என்றார். அவர் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமை அதனால் உடனே ஒத்துக்கொண்டேன். படம் ஆரம்பித்த சில நாட்களில் அவரால் இந்தப்படம் செய்ய முடியவில்லை. அப்போது தான் பத்ரி சார் வந்தார். அவரால் தான் இந்தப்படம் சார்த்யமானது. நமக்கு பிடித்தவர்கள் தவறு செய்யும் போதுப்தான் நமக்கு அதிக கோபம் வரும். இப்போது யூனியனில் பிரச்சனை பேச்சு வார்த்தையில் இருக்கிறது. எல்லாம நல்லபடியாக நடந்து வருகிறது. இதைப்பற்றி இப்போது பேச வேண்டாம்”என்றார்.

பின்னர் பேசிய அரவிந்த் சாமி, “உண்மையில் இது கார்த்திக் நரேன் படம். அவருக்கு எது வேண்டும் வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்தார். நாங்கள் அவர் சொன்னதை மட்டுமே செய்தோம். கார்த்திக் நரேனுக்கு மிக நுணுக்கமான முறையில் படம் எடுக்கும் திறமை இருக்கிறது. அவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பரிசு. இந்தப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான படமாக இருக்கும்” என்றார்.

error: Content is protected !!