இம்புட்டு குட்டியாவா ஒரு ஸ்மார்ட்போன் இருக்கும்! – வீடியோ

இம்புட்டு குட்டியாவா ஒரு ஸ்மார்ட்போன் இருக்கும்! – வீடியோ

இன்றைய இளைஞர்களின் மோகம் பெரிய டிஸ்ப்ளே உள்ள ஸ்மார்ட்போனை நோக்கியே பயணிக்கிறது. ஆனால் அதற்கு மாற்றாக கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் மைக்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

நானிட் மைக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இக் கைப்பேசி வெறும் 1.8 அங்குல அளவே உயரம் உடையது. ஸ்மார்ட்போன் கைக்கு அடக்கமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியினை ஏனைய Android மற்றும் IOS சாதனங்களுடனும் இணைத்து பயன்படுத்த முடியும். இதில் மைக்ரோ சிம் மற்றும் மெமரி கார்டுகளை செலுத்தும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த சிறிய ஸ்மார்ட்போனில் கால், மெசெஜ் மற்றும் வாய்ஸ் ரெக்கார்ட் போன்ற அனைத்தும் செய்ய முடியும். மேலும் கேமரா, சார்ஜ் கேபிள், புளூ டூத், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குட்டி ஸ்மார்ட்போனை, ஸ்மார்ட் வாட்ச் போன்று பொருத்தி கொள்ளலாம். உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

error: Content is protected !!