மைசூர் மன்னர் குடும்பத்தின் மீதான சாபம் நீங்கியது ; மக்கள் ஹேப்பி! – AanthaiReporter.Com

மைசூர் மன்னர் குடும்பத்தின் மீதான சாபம் நீங்கியது ; மக்கள் ஹேப்பி!

400 ஆண்டுகளுக்கு முன், ஒரு பெண் விட்ட சாபத்தால் இதுநாள் வரை நேரடி வாரிசு இல்லாமல் தவித்து வந்தமைசூருமகாராஜா குடும்பத்துக்க இப்போது வாரிசு உருவாகியுள்ளது.மைசூருமன்னர் குடும்பத்து இளவரசிதிரிஷிகாகுமாரி கர்ப்பம் தரித்துள்ளதையடுத்துமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக விஜயநகரப் பேரரரசின் பிரதிநிதியாகிய திருமலை ராஜாவின் குடும்பத்தை நிர்கதியாக்கிய, மைசூரு உடையாரா ராஜா குடும்பத்தில் வாரிசு இல்லாமல் போக வேண்டும் என்றுதிருமலைராஜாவின் மனைவி அலமேலம்மா சபித்துவிட்டார். இதனால், 400 ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் தவித்து வந்தமைசூருராஜ குடும்பத்துக்க இப்போது வாரிசு கிட்டியுள்ளது.1399ம் ஆண்டு முதல் விஜயநகர பேரரசின் ஆட்சிப்பகுதியானமைசூருபகுதியை உடையார் வம்ச மன்னர்கள் ஆண்டு வந்தனர். தங்களது ஆட்சியை நீட்டிக்கும் வகையில், விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்ததிருமலைராஜாவின்ரெங்கபட்டிணம்மீது 1610-ம் ஆண்டு முதலாம் ராஜ உடையார் போர் தொடுத்து வீழ்த்தினார்.இதையடுத்து தலக்காடு எனும் நகருக்குதிருமலைராஜாதனது மனைவிகளுடந் குடிபெயர்ந்தார்.

இதனிடேயேநோயால் பாதிக்கப்பட்டு இருந்த திருமலைராஜா திடீரென மரணமடைந்து விடுகிறார்.இதில் திருமலைராஜாவின்2-வது மனைவி அலமேலம்மா, ரங்கப்பட்டிணம், ரங்கநாதர்கோயிலின்ரெங்கநாயகிமீது அளவற்ற பக்தையாக இருந்தார். இதனால், தலக்காடு நகருக்கு செல்லும் போது கடவுள்ரெங்கநாயகிக்குசூட்டிஇருந்நகைகள், வைரம், முத்து நகைகள்அலமேலம்மாதன்னுடன் எடுத்து சென்றார். இவற்றை ரங்கபட்டிணத்தைகைப்பற்றி உடையார ராஜா கேட்டபோது, அதை தர அலமேலம்மா மறுத்துவிட்டார்.இதைத் தொடர்ந்து 1612ம் ஆண்டு உடையார் ராஜாவின் உத்தரவின் பேரில், தலக்காடு அருகேமாலங்கிஎன்ற கிராமத்தில் வசித்து வந்தஅலமேலம்மாவிடம்இருந்த நகைகளை உடையாரின்படையினர் வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றனர்.அப்போது தன் இயலாமையை நினைத்து கண்ணீர் விட்டு அழுத அலமேலம்மா, உடையார் குடும்பத்துக்கு சாபமிட்டார்.மைசூருமன்னர்களுக்கு குழந்தை பேறு இல்லாமல் போகட்டும் எனஅலமேலம்பா சாபமிட்டார்.இதனால், அன்று முதல் இன்று வரை மைசூரு உடையார் ராஜ குடும்பத்துக்க நேரடியாக எந்த வம்சமும் இல்லாமல் இருந்து வந்தது.

உடையார் மன்னர் வம்சத்தின் கடைசி மன்னரான சாமராஜ உடையார் மகன் கண்டதத்த நரசிம்ம ராஜ உடையார் இளவரசார இருந்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு இவர் மறைவுக்குப் பின், அவருடைய தூரத்து உறவினரானயதுவீர்கிருஷ்ணதத்த சாமராஜ உடையார் 2015ம் ஆண்டுஇளவரசாரகமுடிசூடப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, ஜூன் 27-ந்தேதி,துங்கப்பூர்மன்னர் குடும்பத்து இளவரசியான திரிஷிகாகுமாரி தேவியை,யதுவீர்கிருஷ்மத்தசாம்ராஜஉடையார் திருமணம் செய்து கொண்டார். அலமேலம்மா விட்ட சாபத்தால் இந்த ஜோடிக்கும் குழந்தை இல்லாமல் போய்விடும் என மக்கள் அஞ்சி, கவலை கொண்டு இருந்தனர்.

ஆனால்,மாண்டியா,மைசூரு,சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்ட மக்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில், இளவரசிதிரிஷிகாஇப்போது கர்ப்பமடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது. 400 ஆண்டுகாலஅலமேலம்மாவின்சாபம் இப்போது முடிவுக்கு வந்துள்ளததாக கர்நாடக மக்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.