கடுகு எண்ணெயை உட்கொண்டால் மூளை பாதிக்கும்! – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்! – AanthaiReporter.Com

கடுகு எண்ணெயை உட்கொண்டால் மூளை பாதிக்கும்! – லேட்டஸ்ட் ரிசர்ச் ரிசல்ட்!

சமையலுக்கு பயன்படுத்தும் கடுகில் மனிதனின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், மாங்கனீஸ் சிறந்த நோய் எதிர்பொருளாகவும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

கடுகு மற்றும் கடுகு எண்ணெய் ஆகிய இரண்டுமே ஆரோக்கியத்திற்கு சிறந்தது, எனவே சமையலுக்கு கூட நீங்கள் கடுகு எண்ணெய்யை பயன்படுத்தலாம். இந்த கடுகு எண்ணெய்யின் மருத்துவ பயன்கள் என்னவென்றால் கடுகு எண்ணெய்யில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் ஆன்டி பாக்டீரியல் அதிகம் இருக்கிறது. கை கால் மூட்டு வலி வாயு பிடிப்பு ரத்தக்கட்டு போன்ற பிரச்சனைகளுக்கு கடுகு எண்ணெய்சிறந்த தீர்வு தரும். கடுகு எண்ணெய் பெண்கள் தங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க உதவும், லேசாக சூடு படுத்தியபிறகு கடுகு எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் மறைந்துவிடும். கடுகு எண்ணெய்யுடன் நன்கு அரைத்த மஞ்சள் கலந்து முகத்தில் பூசிவந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறையும். கடுகு எண்ணெய் கடுகு எண்ணெயால் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ பாதுகாப்பானதாக கருதப்படுகிறது என்றெல்லாம் இது நாள் வரை சொல்லப்பட்டு வந்த நிலையில் உலகிலேயே மிக அதிக அளவில் உபயோகப்படுத்தும் கடுகு எண்ணெயால் மூளைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை உட்கொண்டால், நினைவாற்றல் மற்றும் கற்கும் திறன் பெரிதும் பாதிப்படையும் என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக கடுகு எண்ணெயை எலிக்கு அளித்துவந்தனர். இதன் முடிவில் எலியின் உடல் எடை அதிக அளவு கூடியது தெரிய வந்துள்ளது. “கடுகு எண்ணெய் மற்ற எண்ணெய்களைக் காட்டிலும் மிகவும் விலை குறைவான ஒன்றாகும். இதனை உட்கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது” என அமெரிக்காவில் உள்ள டெம்பிள் யூனிவர்சிட்டி பேராசிரியர் டொமெனிக்கோ பிராடிகோ தெரிவித்தார்.“எடுத்த சில சோதனைகளிலேயே இதன் விளைவுகள் அனைத்தும் தெரியவந்துள்ளது. இதனால் மூளை பாதிப்படையும் என்று தெரியவந்தது” என்றும் கூறினார்.

இதற்கு முன்னர் பல சோதனைகளை எலியை வைத்து செய்துள்ளனர். ஆலிவ் எண்ணெயை எலிக்கு அளித்து சோதனை செய்தததில் அதன் மூளை வளர்ச்சி அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அதனை வைத்து கடுகு எண்ணெயை மக்களுக்கு என்ன நன்மைகள் பயக்கும் என்று அறிய இந்த ஆய்வுகள் செய்யப்பட்டதாக பாட்ரிகோ கூறினார்.

இதையொட்டி பிறந்து 6 மாத காலம் ஆன எலிகள் இரண்டில், ஒன்றிற்கு சராசரி உணவுகள் வழங்கப்பட்டன. மற்றொன்றிற்கு கடுகு எண்ணெய் தினமும் வழங்கப்பட்டது. கடந்த 1 வருட காலமாக இது தொடர்ச்சியாக செய்யப்பட்டது. இதன் இறுதியில் கடுகு எண்ணெய் அளிக்கப்பட்ட எலியின் எடை மற்றொரு எலியைக் காட்டிலும் அதிகரித்திருந்தது தெரிய வந்துள்ளது. அதன் திறன் ஆற்றல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்மூலம் கடுகு எண்ணெயை உட்கொள்ளும் மக்களின் மூளையும் பெரிதும் பாதிக்கும் என்று பாட்ரிகோ எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..