இறுதி வரை வின்னராகவே இயற்கை எய்திய ஒரே தமிழன், ஏன் இந்தியன்! – AanthaiReporter.Com

இறுதி வரை வின்னராகவே இயற்கை எய்திய ஒரே தமிழன், ஏன் இந்தியன்!

மூத்த கலைஞர் மு கருணாநிதி : கலைஞர் மேல் ஆயிரம் மாற்றூகருத்து இருந்தாலும் அதெல்லாம் வெறும் அரசியல் காரணங்களூக்கவே மட்டுமே தவிர வேறு ஏதூம் தனிபட்ட விஷயத்துக்கானது அல்ல.

1957ஆம் ஆன்டு குளித்தளையில் முதன் முதலில் தேர்தலில் நின்று 2016 ஆம் ஆண்டு வரை நடந்த அத்தனை தேர்தல்களிலும் (1984 தவிர – அவர் அந்த ஒரு தேர்தலில் மட்டும் நிற்கவில்லை) வெற்றி பெற்று தன் இறுதி வரை வின்னராகவே இயற்கை எய்திய ஒரே தமிழன், ஏன் இந்தியன் என்று கூட கூறலாம். தமிழ் என்ற எழுத்தை பற்றி எவர் சிலாகித்தாலும், எவர் ஆராய்ச்சி செய்தாலும் எங்காவது சில இடங்களில் இவரின் பங்களிப்போ அல்லது இவரின் ஈடுபாடு கண்டிப்பாய் இருக்கும் என்பது 100% உண்மை.

சினிமா தொழிலிலும் இவரின் பங்களிப்பு பெரியது. அதில் அவர் வசனம் எழுதிய படமாகட்டும் அல்லது பாட்டாகாட்டும் அல்லது வேறு வகையில் அவர் செய்த தமிழ்த்துறைக்கான பங்களிப்பு மிகவும் பெரியது. பாட்டெக்களுக்கு முக்கியத்தூவம் கொடுத்த நாட்களில் வசனங்கள் மூலம் படங்களை பல மடங்கு பலம் வாயந்ததாக மாற்றிக்காட்டியதும், வசனகர்த்தா என்ற பட டைட்டி லுக்கு பெருமை சேர்த்தவர் மற்றும் தீப்பறக்கும் வசனம் ஹீரோ மட்டுமல்ல, ஹீரோயினான கண்ணாம்பாள் போன்ற ஆகச்சிறந்த நடிகைகளை கூட உணர்ச்சி பிழம்பாய் மாற்றீ காண்பித்த இவர் சாதனை இவருக்கு மட்டுமே உண்டானது.

லேட்டஸ்ட் டிரெண்டான டிவி ஷோக்களில் கூட இவரின் இரு படைப்புகள் பலரையும் பேச வைத்த பன்முக கலைஞர் தான் இவர்.

எல்லோரும் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் என்ற நினைத்த 2017ல் இவர் தான் அவருக்கு உடம்பு சரியில்லை அவர் உடம்பு நலனில் அக்கரை செலுத்த வேண்டும் என கூறிய முதல் எதிர்கட்சி தலைவர் இந்த கலைஞரே தான்.

95 வருட காலம் மூன்று தலைமுறைக்கும் பிடித்து போன எனக்கு தெரிந்த அரசியல்வாதிகள் வரிசையில் இவருக்கும் வரலாற்றில் முக்கிய இடமுன்டு.