Mr. லோக்கல் – திரை விமர்சனம்!

Mr. லோக்கல் – திரை விமர்சனம்!

நம்மில் பலருக்கு பொது விருந்து அல்லது பஃப்பே டின்னர் என்ற சமாச்சாரம் அறிமுகமாகி இருக்கும். நம் இலையில் அல்லது டேபிளில் பல்வேறு உணவுப் பதார்த்தங்கள் காணக் கிடைக்கும்.. அவைகளில் எது நமக்கு பிடிக்கும் என்று அதை வழங்கோவோருக்குத் தெரியாது.. நமக்கும் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள உணவில் எவை சுவையாக இருக்கும் என்று தெரியாது. அதனால் கலர்ஃபுல்லாக, சூடாக , கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள ஃபுட்ஸை கொஞ்சம், கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்ப்போம்.. அப்படி சுவைத்த பின்னர் நமக்கு மிகவும் பிடித்த பதார்த்தம் மட்டும் மிகக் குறைச்சலாகக் கிடைக்கும்.. அது போல்தான் இன்றைய சினிமா ஆகி விட்டது..அந்த டைப்பில் தயாராகி ரிலீஸாகி உள்ள படம்தான் ‘Mr. லோக்கல்’.

ரசிகர்கள் கூடிய இடத்தை சிரிப்பரங் கமாக மாற்றி தனிக் கவனம் பெற்ற ஓகேஓகே & பாஸ்@ பாஸ்கரன் புகழ் இயக்கத்தில் நம்ம வீடு பையன் சிவகார்த்திகேயன் பார்ப்போரை ஜாலியாக்க முயன்றுள்ளார்கள் என்பது உண்மைதான்.. படத்தின் கதை முன்னரே சகலதரப்புக்கும் தெரிந்தது தான். அதாவது ஹீரோ சிவா கார் ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கூடவே கிச்சுகிச்சு மூட்டும் நோக்கில் சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் வேலை பார்த்து வருவதாகவும் கதையை வடிமைத்து இருக்கிறார்கள். சிவா-வின் அம்மாவான ராதிகா, டி.வி.சீரியல் நடிகை ஒருவரிடம் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அம்மாவின் ஆசை நிறை வேற்றுவதற்காக டி.வி. நடிகையிடம் பேசி போட்டோ எடுக்க அனுமதி வாங்குகிறார்.

அந்த டி.வி. நடிகையை பார்க்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு போன இடத்தில் சிவகார்த்திகேயன் அங்கு டி.வி. தொடர் தயாரிப்பாளர் நாயகி நயன்தாராவை சந்திக்கிறார். இவர் களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. பிறகென்ன.. தொடரும் சினிமாத்தனமான மோதலால் காதல் & மோதல் ஏற்படுகிறது. ம்.அப்புறம்..அந்த கோடீஸ்வரியான நயன்தாராவும் மிடில் கிளாசை சேர்ந்த சிவகார்த்தி கேயனும் எப்படி இணைந்தார்கள் என்பதுதான் லோக்கல் ஸ்டோரி..

ரொம்ப மெனக்கெடாமல் உருவாக்கப்பட்ட இப்பேர்பட்ட கதையின் நாயகனாக கமிட் ஆகி நடித்து இருக்கும் (நம்புங்க பாஸ்) சிவகார்த்திகேயன், தன் வழக்கமான பாணியில் இதுதான் காமெடி, ஆக்‌ஷன், நடனம் என்று வெளிப் படுத்தி கெட்ட பெயர் வாங்காமல் . படத்தை தூக்கி நிறுத்த பெரிதும் உதவுகிறார். ஹீரோயினாக நடித்திருக்கும் நயன்தாரா படம் முழுவதும் அழகு பதுமையாக வருகிறார். சிவகார்த்திகேயன் மீது கோபம் காட்டும் போதும், அன்பு காட்டும் போதும் அழகாகவே நடித்து முடிந்த அளவு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

சிவகார்த்திகேயனுடன் வேலை பார்க்கும் சதீஷ், ரோபோ சங்கர், ஆட்டோ ஓட்டுநராக வரும் யோகி பாபு ஆகியோர் காமெடி என்ற பெயரில் தங்களால் முடிந்த அளவு மயிலிறகு இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே வெகுளித் தாயாக வாழ்ந்து காட்டி இருக்கிறார் ராதிகா. மேனேஜராக வரும் தம்பிராமையாவும் பாஸ் மார்க் வாங்குகிறார். தன் முந்தைய படங்களில் இருந்தது போல் டாஸ் மாக்கில் குடித்து விட்டு அரை டவுசர்தனமாகச் சிரித்தப்படி ஜோக் என்ற பெயரில் எதையோ சொல்வது மற்றும் டபுள் மீனிங் காட்சிகள் இல்லாமல் முழுப் படத்தை கொடுத்திருப்பதற்கு தனி பொக்கே.

மொத்தத்தில் இந்த மிஸ்டர். லோக்கல் என்ற பஃப்பே விருந்தில் உங்களுக்கு பிடித்த பதார்த்தமும் இருக்கிறது என்று நம்பி போகலாம்.. அதே சமயம் உங்களுக்குப் பிடித்த சில டிஷ் மட்டும் பிடித்த் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்பதுடன் ஃபேமிலியோடு போகும் பட்சத்தில் திருப்தியாக திருப்பி அனுப்பும் டின்னர்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மார்க் 3 / 5

error: Content is protected !!