சரக்கடித்து விட்டு வரும் ஹஸ்பண்டை போட்டுத் தாக்க மட்டை!- ம. பி,யின் பாஜக அமைச்சர் அன்பளிப்பு – AanthaiReporter.Com

சரக்கடித்து விட்டு வரும் ஹஸ்பண்டை போட்டுத் தாக்க மட்டை!- ம. பி,யின் பாஜக அமைச்சர் அன்பளிப்பு

மத்திய பிரதேசத்தில்  அம்மாநில அரசின் சார்பில் 700 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சர் கோபால் பார்கவா, மணமக்களை வாழ்த்தியுடன், அனைத்து ஜோடிகளுக்கும் மரத்திலான சிறிய பேட் ஒன்றை பரிசாக வழங்கி கள்ளச்சாராயம் காய்ச்சினால் பெண்களே அடித்து உதையுங்கள். அதன்பிறகு போலீசுக்கு தகவல் தெரிவியுங்கள் என்று இலவசமாக செல்போன் ஒன்றையும் வழங்கி அடவைஸ் செய்துள்ளார். பாஜக அமைச்சர் வழங்கிய அந்த பேட்டில், ‛குடிப்பவர்களை அடிக்க; போலீஸ் தலையீடு கூடாது’ என எழுதப்பட்டிருந்தது.
 mp may 2
மத்தியபிரதேச மாநில சமூக நீதித்துறை அமைச்சர் கோபால் பார்கவா தனது தொகுதியில் சாராய சீரழிவை போக்கை  பெண்களை போராடும்படி தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகதான் புதிதாக திருமணம் செய்த பெண்களுக்கு சிறிய மட்டை கொடுத்து  உங்கள் கணவர்கள் குடி போதையில் வந்தால் இந்த மட்டையால் அடிக்கும் படி கூறியிருக்கிறார்.
மேலும் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக  ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 15 முதல் 20 பெண்களை தேர்ந்து எடுத்து இலவசமாக ரூ.3000 மதிப்பிலான செல்போன்கள்  வழங்கி உள்ளார். இரவில் இந்த பெண்கள்படையினர்  ரோந்து வருவார்கள்.  யாராவது கள்ளச்சாராயம் காய்ச்சினால் அவர்களை அடித்து துவைப்பார்கள்.  பிறகு போலீசுக்கு போன் செய்வார்கள். போலீசார் வரவில்லை அல்லது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எனக்கு போன் செய்யுங்கள் நான் வருகிறேன் என்றும் கோபால் பார்கவா கூறியிருக்கிறார்.
சாராயத்தை ஒழிக்க எத்தனையோ வழிகளில் முயன்றும் முடியவில்லை. போலீசாரும் கலால்துறையும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகிறார்கள். அதனால் தான்கள்ளச்சாராயத்தை  பெண்கள் மூலம் ஒழிக்கவே இப்படி ஒரு நுாதனமான வழியை  தேர்ந்து எடுத்திருக்கிறேன். இது வெற்றி பெற்றால் மாநிலம் முழுவதும் இதே முறை பின்பற்றப்படும. இந்தப் படைக்கு “குலாபி கேங்”  என்று பெயரிட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது வன்முறையை துாண்டுவது ஆகாதா என்று கேட்டதற்கு, சாராயம் குடித்து விட்டு வரும் ஆண்களால்பெண்கள் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகிறார்கள். அது வன்முறை இல்லையா… எத்தனை பெண்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இது பெண்களின் தற்காப்புக்காகத் தான் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.