இப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க? – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி!

இப்ப என்ன சொல்லூவீங்கோ.. இப்ப என்ன சொல்லுவீங்க? – கர்நாடகா இடைத்தேர்தல் முடிவு குறித்து மோடி!

கர்நாடகாவில் 15 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், 12 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலை யில், ஜார்கண்ட் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பார்ஹி பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கர்நாடக இடைத் தேர்தல் முடிவுகளை கருத்தில்கொண்டு,”தென்னிந்தியாவில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று கூறியவர்களுக்கு, ஜனநாயக வழியில் இன்று மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிகளும், கர்நாடகாவில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மாற்றி, மக்களின் முதுகில் குத்தினர். இப்போது, அந்த கட்சிகளுக்கு முடிவு வந்துவிட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வர வில்லை” என்று சாடினார்.மேலும்,”இன்று வெளிவந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள், மீண்டும் தங்கள் முதுகில் குத்தி விடாமல் இருப்பதை மக்கள் உறுதிபடுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கி உள்ளனர்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

கர்நாடகா மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தபோது எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் தனி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதீய ஜனதா-105 தொகுதிகளில், காங்கிரஸ்-78 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம்-37 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து பாரதீய ஜனதா ஆட்சி அமைவதை தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கைகோர்த்தது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி முதலமைச்சர் ஆனார்.

இந்த நிலையில் குமாரசாமி ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து கர்நாடக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 208 ஆக குறைந்ததால் பெரும்பான்மைக்கு தேவையான 105 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தது.

இந்த நிலையில் காலியாக அறிவிக்கப்பட்ட 17 தொகுதிகளில் பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர், ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகள் தொடர்பாக வழக்குகள் இருப்பதால் மற்ற 15 தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி அத்தானி, காக்வாட், கோகாக், எல்லா புரா, ஹுரேகேரூர், ரானி பென்னூர், விஜயநகரா, சிக்பளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஹொஸ்கேட், கே.ஆர்.பேட், ஹுன்சூர் ஆகிய 15 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 67.91 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இன்று காலை 8 மணிக்கு 15 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. காலை 8.30 மணிக்கு முன்னிலை நிலவரம் தெரியத் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளில் முன்னிலை பெற்றனர்.

இதில் ஹுன்சூர், சிவாஜிநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஹொஸ்கேட் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சரத் பசே கவுடா வெற்றி பெற்றுள்ளார். மீதமுள்ள 12 தொகுதிகளிலும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஏற்கனவே 105 எம்.எல்.ஏகள் உள்ள நிலையில் கூடுதலாக 12 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ளதன் மூலம் கர்நாடக சட்டசபையில் பா.ஜ.கவின் பலம் 117 ஆக உயர்ந்துள்ளது. 225 எம்.எல்.ஏக்களை கொண்ட இந்த சபையில் அறுதி பெரும்பான்மைக்கு 113 பேர் தேவை என்ற நிலையில், பா.ஜ.க.வின் எண்ணிக்கை 117 ஆகி உள்ளதால் எடியூரப்பா ஆட்சிக்கு அறுதி பெரும்பான்மை கிடைத்துள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, நிரந்தரமான ஆட்சி அமைய பா.ஜ.கவுக்கு மக்கள் வாக்களித்து உள்ளனர் என்றார். வெற்றி பெற்ற 12 எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்பார்கள் என்று அவர் கூறினார். இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜார்கண்ட் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பார்ஹி பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகளை கருத்தில்கொண்டு,”தென்னிந்தியாவில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்று கூறியவர்களுக்கு, ஜனநாயக வழியில் இன்று மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணிகளும், கர்நாடகாவில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மாற்றி, மக்களின் முதுகில் குத்தினர். இப்போது, அந்த கட்சிகளுக்கு முடிவு வந்துவிட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவரவில்லை” என்று சாடினார்.

மேலும்,”இன்று வெளிவந்துள்ள இடைத்தேர்தல் முடிவுகள், மீண்டும் தங்கள் முதுகில் குத்திவிடாமல் இருப்பதை மக்கள் உறுதிபடுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளனர்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

error: Content is protected !!