15 வயசான (பழைய) வாகனங்களை அழிக்க மத்திய அரசு முடிவு! – AanthaiReporter.Com

15 வயசான (பழைய) வாகனங்களை அழிக்க மத்திய அரசு முடிவு!

பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற் காக மின்சார வாகனங்களுக்கான பதிவு கட்டணத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் பெட் ரோல், டீசல் கார், பைக்குகளுக்கான பதிவு கட்டணம் 400 மடங்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 15 ஆண்டுகளான வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை தகுதிச் சான்று (எப்.சி.) பெற வேண்டும். இதனை 6 மாதங்களாகக் குறைக்க திட்டமிடப் பட்டுள்ளது. அத்துடன் பழைய வாகனங்களை அழிக்க நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மையங் கள் அமைக்கப்படும். இந்த மையங்களில் வாகனங்களை அழித்துவிட்டு அதற்கான சான்றிதழை பெற்று வருபவர்கள், புதிய வாகனத்துக்கு பதிவு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதுபோல பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு மத்தியில் செயல்படுத்த திட்டமிட்டு பல்வேறு துறைகளின் கருத்துக்களை அறிய திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் அங்கீகரிக்கப்பட்ட வாகன அழிப்பு மையங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 15 ஆண்டுகள் பழமையான தனியார் வாகனங் களுக்கான பதிவுக் கட்டணம் 25 மடங்கும், வணிக வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்யும் ஃபிட்னஸ் சான்றிதழ் கட்டணம் 125 மடங்கும் உயர்த்தப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

வணிக வாகனங்கள் நல்லமுறையில் இருப்பதை உறுதிப்படுத்தி ஆண்டுதோறும் சான்றிதழ் பெற வேண்டியது அவசியமாகும். அதே போன்று தனியார் வாகனங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறு பதிவுச் சான்றிதழ் பெறுவதும் அவசியமாகும் தங்கள் பழைய வாகனங்களை அழிக்க முன் வருபவர்களுக்கு பதிவுக்கட்டணத்தில் சலுகை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், பழைய வாகனங்களை அழித்து விட்டு புதிய வாகனங்களை வாங்க முன்வருபவர்களுக்கு விலையில் சலுகை அளிப்பது குறித்து வாகன உற்பத்தி நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய தரை வழி போக்குவரத்து துறையினர் முன்னதாக விளக்கிய போது, “ 15 ஆண்டுகளுக்கு மேலாக ஓடும் பழைய வாகனங்களை சரண்டர் செய்து ரூ.15 லட்சம் புதிய லாரி வாங்குபவர்களுக்கு ரூ.5 லட்சம் மானியம் கொடுக்கும் திட்டம் உள்ளது. அதன்படி பழைய வாகனத்தை சரண்டர் செய்துவிட்டு புதிய லாரி வாங்குபவர்களுக்கு தயாரிப்பாளர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் தள்ளுபடியும்,மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் இருந்து ரூ.2.5 லட்சம் வரிச் சலுகையும் கொடுக்க நாங்கள் முன்மொழிவோம். வரிச்சலுகை ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு அடிப்படையில் இருக்கும். ஆட்டோமொபைல் துறை 22 சதவீத வளர்ச்சி அடையும். அனை வருக்கும் இது வெற்றிநிலையாகும். இந்த கொள்கை அமல்படுத்தியபிறகு தானியங்கி மோட்டார் வாகனத்துறையின் பணப்புழக்கம் ரூ. 4.5 லட்சம் கோடியில் இருந்து ரூ.20 லட்சம் கோடியாக உயரும். அரசின் லட்சியமான சகர்மலா திட்டத்தின்படி தொழீலக குழுமங்களில் மீள்சுழற்சி பிரிவுகள் அமைக்கப்படும். அழிக்கப்பட்ட அலுமினியம்,இரும்பு, செம்பு ஆகியவற்றின் மூலம் மோட்டார் வாகன பாகங்கள் மலிவாக கிடைக்கும்”என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.