இப்போ நானும் ஃபீல் பண்றேன் – ரேடியோவில் மோடி பேச்சு – AanthaiReporter.Com

இப்போ நானும் ஃபீல் பண்றேன் – ரேடியோவில் மோடி பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் ’மான் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக பொதுமக்களுடன் தொடர்புகொண்டு உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில் இவ்வாண்டின் இறுதி உரையாக  இன்று பிரதமர் மோடி  பேசியது இதுதான் :
modi dec 25

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். கிறிஸ்து ஏழைகளுக்காகவே பாடுபட்டார். இந்த நாளில் சேவை மனம் தழைத்தோங்கட்டும். அதேபோல் இந்தியக் கல்வியில் புதிய வழியை அறிமுகம் செய்த மதன்மோகன் மாள்வியாவின் பிறந்தநாள். இவர் பெயரில் புற்று நோய் மையம் ஒன்றையும் திறந்து வைத்தேன். இன்று அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள் கூட. அடல்ஜிக்கு எனது வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள். நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் பாடுபட்டார். இது குறித்து அவருக்கு இன்று காலை ட்வீட் செய்தேன்.

ரொக்கமில்லா பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு வழிவகை ஏற்படுத்தியுள்ளது. லக்கி கிரஹக் யோஜனாவின் கீழ் 15,000 பேர்களுக்கு பரிசி அளிக்கப்படுகிறது. அடுத்த 100 நாட்களுக்கு பலவீடுகளும் ரூ.1000த்திற்கான பரிசைப் பெறவுள்ளன. ஆனால் மொபைல் பேங்கிங், ஈ-பேங்கிக்ங், ரூபே கார்டு, உள்ளிட்ட ரொக்கமற்ற பணபரிவர்த்தனைக்கு நீங்கள் மாறும்போதுதான் பரிசுப்பட்டியலில் நீங்கள் இணைய முடியும்.

ரூ.50 முதல் ரூ.3000 வரை ரொக்கமில்லா பரிவர்தனை செய்யும் நபர்கள் இதனால் பயனடைவார்கள். ஏழைகளில் ஏழைகளாக இருப்பவர்களும் மின்னணு பரிவர்ட்தனை மேற்கொள்ள முடியும்.மின்னணு பரிவர்த்தனை மேற்கொண்டு கிராமத்தினரும் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பில் பயனடையலாம். ரொக்கமற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வர்த்தகர்கள் டிஜி தன் வியாபார் யோஜனா மூலம் நிறைய பயன்பெறுவர். ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகள் வைத்திருக்கும் 20 கோடி குடும்பங்களுக்கு ரூபே அட்டைகள் கிடைக்கும்.

உங்கள் அருகில் இருக்கும் இளைஞர்கள் நிச்சயம் மொபைல் உள்ளிட்ட ரொக்கமற்ற பொருளாதாரம் பற்றி தெரிந்து வைத்திருப்பர். இத்தகைய இளைஞர்களிடமிருந்து அனைவரும் உதவிபெறுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்புவது போல் சுலபமானதுதான் டிஜிட்டல் பரிவர்தனைகளும்.

விவசாயிகள் மின்னணு பரிவர்த்தனைகள் மூலம் நிறைய பயன்பெறுவர். மின்னணு முறைக்கு மாறும் விவசாயிகளுக்கு அரசு சிலபல திட்டங்களை அறிவித்துள்ளது அதன் மூலம் விவசாயிகள் பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமூகத்தில் ஊழல்கள் பற்றியும் முறைகேடுகள் பற்றியும் மக்கள் புகார் எழுப்பியுள்ளனர். இது ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதால் நாம் ராணுவப்படையினர் போல் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும்.

நாமனைவருமே மாற்றத்தின் காரணிகள். அனைத்துக் குடிமக்களும் தற்போது அனுபவித்து வரும் கஷ்டங்களுக்காக நானும் வருந்துகிறேன். கறுப்புப் பணத்திற்கு எதிராக தங்கள் கைகொடுத்து உதவும் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வணக்கங்கள். மக்கள் உண்மைக்காக நிற்கிறார்கள். எனது அன்பிற்குரிய குடிமக்கள் பல குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போராடி வந்துள்ளனர்.

சிலர் அரசின் செயல்பாடுகள் மீது தவறு கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர். உணர்வுபூர்வமான அரசு என்பதால் எவ்வளவு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்பது பற்றி கவலையில்லை. ஊழல்வாதிகளுக்கு எதிராக நாம் போராடியே ஆகவேண்டும்.

இந்தநாட்டு மக்களுக்கு நான் இன்னொரு காரணத்திற்காகவும் நன்றி தெரிவிக்கிறேன். வருமான வரி சோதனையில் நிறைய ஊழல் பேர்வழிகள் சிக்குகின்றனர், இதற்கான துப்புத் தகவலை அளித்தது பொதுமக்கள்தான். இந்த ஊழல்வாதிகள் பற்றிய தகவல்களை அளிக்க அரசிடம் மின்னஞ்சல் முகவரி உள்ளது, நீங்கள் உதவிபுரிந்தால் ஊழலுக்கு எதிரான போராட்டம் எளிதாக அமையும்.

நிறுத்துவதோ, களைப்படைவதோ கிடையாது, பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. பினாமி சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு சட்டம் தன் கடைமையைச் செய்யும். சமூக நலன்களுக்காகவே நாங்கள் அனைத்தையும் செய்கிறோம்.

விவசாயத்தைப் பொறுத்தவரை விதையிடுதலில் நாம் கடந்த ஆண்டு சாதனையை முறியடித்துள்ளோம். உலக பொருளாதார அரங்கிலும் இந்தியா சில மைல்களை தொட்டுள்ளது. இந்தியாவின் உலகப் பொருளாதார தரநிலை முன்னேறியுள்ளது. இந்தியாவின் வர்த்தக நடவடிக்கைகள் உயர்வடைய நாங்கள் விரைவு கதியில் பணியாற்றி வருகிறோம். 2016 உலகவங்கி செயல்திறன் பட்டியலிலும் நம் நாடு முன்னேறியுள்ளது.

எனதருமை நாட்டுமக்களே! நாடாளுமன்றம் நடந்த விதம் குறித்து நாட்டு மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். குளிர்காலக் கூட்டத்தொடரில் நடந்தது பற்றி அனைத்து தரப்பினரும் கொதிப்படைந்துள்ளனர். அனைத்து இடையூறுகளுக்கு இடையேயும் மாற்றுதிறனாளிகள் மசோதாவை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இது அரசின் முக்கியத் திட்டங்களுள் ஒன்று.

மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் மதிப்பும் கிடைப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது. பாராலிம்பிக்கில் இவர்கள் 4 பதக்கங்களை வென்றது நம்மை பெருமைப்படுத்துகிறது. திவ்யாங் ஜன் ஒரு மதிப்புமிக்க சக்தியாகும். மாற்றுத் திறனாளிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக ரூ.352 கோடி அளிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மேலும் கூடுதல் மாற்றுத் திறன்களையும் சேர்த்துள்ளோம்.நாம் கருண் நாயர், விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகிய வீரர்களின் சாதனைகளுக்காக பெருமையடைகிறோம்.

15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற ஜூனியர் ஹாக்கி அணிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த மாதம் மகளிர் ஹாக்கி அணி ஆசியக்கோப்பையை வென்றது. தற்போது அண்டர் 18 அணி ஆசியக் கோப்பையில் வெண்கலம் வென்றுள்ளது. அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துக்கள்.

எனதருமை நாட்டுமக்களே! 2017-ம் ஆண்டு புதிய வளர்ச்சி உச்சங்களை எட்டட்டும். ஏழைகளை விடவும் ஏழைகள் தங்களுக்குரியதைப் பெற வேண்டும். என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.