மாதிரி சட்டப்பேரவை! – அண்ணா அறிவாலயத்தில் அரங்கேற்றம்!

மாதிரி சட்டப்பேரவை! – அண்ணா அறிவாலயத்தில் அரங்கேற்றம்!

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை நேற்று காலை மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை திமுக தாக்கல் செய்தது. ஆனால் இந்த தீர்மானத்தை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்தார். இதனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், முதல்வர் பழனிசாமி பதவி விலகும் வரை சட்டசபையில் பங்கேற்க போவதில்லை என்றும் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் நடத்த இருப்பதாக திமுக அறிவித்து அதன்படி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.இந்த மாதிரி சட்டப்பேரவையின் சபாநாயகராக சக்கரபாணி உள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக மாதிரி சட்டசபை துவக்கத்தில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 கோடி வழங்கும் துர்மானத்தை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்கஒத்திவைப்பு தீர்மானத்தை ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இதன் பின்னர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் பெற்றிருந்த நிலையில், ஆணையம் அமைப்பது தாமதமாகி வருகிறது.இது பாஜக செய்யும் பச்சை துரோகம் என்றார். உச்சநீதிமன்றம், ஜூன் 1 ஆம் தேதிக்குள் ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், மத்தியஅரசு இதற்கு ஒப்புதல் தெரிவிக்காமல் இருப்பது, மத்திய அரசு தமிழகத்தை தனித்தீவாக கருதுவதாக உள்ளது என்றார். சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மத்தியஅரசு செயல்படுவதாகவும், அதற்கு துணைபோகும் அதிமுக அரசையும் திமுக கண்டிக்கிறது என்றார்.

மத்திய அரசின் இந்த வஞ்ச போக்கைக் கண்டித்து, உடனனடியாக காவிரி ஆணையம் அமைக்க வேண்டும். டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்என்று மாதிரி சட்டமன்ற பேரவை வலியுறுத்துவதாகவும் மாதிரி சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சிறப்புதீர்மானம், மாதிரி சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை கருணாஸ், அபுபக்கர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள்இதனை வழிமொழிந்தனர்.

error: Content is protected !!