மெட்ரோ ரயில் ஸ்கீம் கொண்டாந்தது திமுக-தான்னு எத்தினிவாட்டி சொல்றது? – ஸ்டாலின் காட்டம்!

மெட்ரோ ரயில் ஸ்கீம் கொண்டாந்தது திமுக-தான்னு எத்தினிவாட்டி சொல்றது? – ஸ்டாலின் காட்டம்!

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் நாங்கள் மக்கள் மன்றத்தில் திரும்பத் திரும்ப பொய் சொல்வோம்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “திருமங் கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலான மெட்ரோ ரயில்” திட்டத் துவக்கவிழாவில் பேசியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

metro dmk may 15

2006 முதல் 2011 வரை தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது 7.11.2007 அன்று நடைபெற்ற 23 வது அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டப் பணிகளை கழக அரசுதான் தீவிரமாக மேற்கொண்டது. நானே பலமுறை அப்பணிகளை பார்வை யிட்டு விரைந்து முடிப்ப தற்கு நடவடிக்கை எடுத் திருக்கிறேன். அந்த வகையில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் கழக அரசின் முதற்கட்ட வெற்றிதான் சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ஓடிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயிலும், இப் போது திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப் பாதையில் செல்லும் மெட்ரோ ரயிலும் என்பதை முதலமைச்சருக்கு மீண்டு மொருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அது மட்டுமல்ல, மெட்ரோ ரயில் திட்ட நிதிக்காக தலைவர் கலைஞர் ஆணைப்படி ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரத்திற்குச் சென்றேன். அங்குள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் 59 சதவீத நிதியளிக்கும் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு, ஜப்பான் கையெழுத்திட்ட பிறகு திரும்பி வந்தேன். இதுபோன்ற மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கு மற்ற மாநிலங்கள் இரண்டரை வருடத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு நிதி 12 மாதத்தில் பெறப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனை.

நிலைமை இவ்வாறிருக்க, மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று “இலைச் சோற்றில் முழு பூசணிக் காயை மறைப்பது போல்” கோயபல்ஸ் பிரச்சாரத் தில் ஈடுபடுவதற்கு முதலமைச் சருக்கு கூச்சமாக இல்லையா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன். முதலமைச்சராவது புதிதாக பொறுப்பேற்றவர். அ.தி.மு.க.விற்குள் நடை பெற்ற “அணி போட்டியில்” தற்காலிகமாக அந்த பதவிக்கு வந்திருப்பவர். ஆனால் அந்தத் துவக்க விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு “மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது” என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அனுபவமிக்க மத்திய அமைச்சர் ஒருவர் அரசு விழாவில் பங்கேற்று தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது உள்ளபடியே வேதனையளிப்பதாக இருக்கிறது. “மெட்ரோ ரயில் வேண்டாம். நாங்கள் மோனோ ரயில் விடப்போகிறோம்” என்று கூறி, இரு வருடங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடக்கி வைத்ததை மத்திய அமைச்சர் முழுமையாக மறைத்து, அதிமுக வாக்காளர்களை தங்கள் கட்சிக்கு இழுக்க நினைக்கலாம். ஆனால் உண்மைக்குப் புறம்பான தகவலை ஒரு அரசு விழாவில் வெளியிடுவது மிகத் தவறானது என்பதை மத்திய அமைச்சர் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்,

error: Content is protected !!