குழந்தைக்கு காய்ச்சலா? உடனடியாக ஜி.ஹெச்.வாங்க:- விஜயபாஸ்கர் அட்வைஸ்! – வீடியோ – AanthaiReporter.Com

குழந்தைக்கு காய்ச்சலா? உடனடியாக ஜி.ஹெச்.வாங்க:- விஜயபாஸ்கர் அட்வைஸ்! – வீடியோ

குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை நாடுமாறு கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாமதமாக அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை குணப்படுத்துவது மட்டுமே சவாலான காரியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான பிரிவில் டெங்கு காய்ச்சல் குறித்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே டெங்கு காய்ச்சலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு தாக்கம் குறித்து கண் காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்து சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ”காய்ச்சல் பாதிப்போடு அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர் களைப் புற நோயாளிகளாகக் கருதக்கூடாது. உடனடியாக உள் நோயாளிகளாக அவர்களை அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக சிறு குழந்தைகளுக்குக் காய்ச்சல் வரும்போது, பெற்றோர்களிடம் வலியுறுத்தி மருத்து வமனையிலேயே தங்க வைக்க வேண்டும், 3 நாட்கள் அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகே, பெற்றோர்களை அழைத்துப் பேசி வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இதுதொடர்பாக அறிவுரைகள், அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. டீன்கள், ஜேடி உள்ளிட்ட அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.