ஆப்பிள் ஐஓஎஸ் 10 மற்றும் மேக் ஓஸ் சியரா டாப் 10 தமிழ் விமர்சனம்…..

ஆப்பிள் ஐஓஎஸ் 10 மற்றும் மேக் ஓஸ் சியரா டாப் 10 தமிழ் விமர்சனம்…..

1. All new lock screen – புது லாக் ஸ்க்ரீன் இதில் அதிக வசதி உள்ளது. வெதர் / கடைசி எஸ் எம் எஸ் / மற்றும் ரிமைன்டர் / தேதி / நேரம் மற்றும் வேறு வகையில் கூட மாற்றீ அமைக்கும் வகையில் உள்ள அற்புதம்.

ravi 19

2. Siri updates சிரி என்ற சக்களத்தி முதன் முறையாக டெவலர்பர்களுக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது. இந்த முறை சிரி ஆப்பிள் உபயோகத்தை தவிர அதர் ஆப்ஸ்களுக்கும் கமான்ட் கிடைக்கும் வகையில் – உதாரணம் – அஞ்சு நிமிஷம் கழிச்சி மனைவிக்கு வாட்ஸப் மெசேஜ் அனுப்பி வெறும் ரவை மட்டும் போதுமா கூட பொட்டுக்கடலை வாங்கிவரனுமான்னு மெசேஜ் பண்ணுடி என் சக்காளத்தினா – ஒகே டன் அபப்டினு கொஞ்சமும் முனகாம பதில் சொல்லும் அற்புதம்.

3. Quick Type enhancements என்னும் சிரி வழி மெசேஜ் அனுப்ப / அனிமேஷன் மெசேஜ் கைப்பட வரைஞ்சு அனுப்ப / தாறுமாறா ஸ்டிக்கர் கலெக்க்ஷன் / மற்றும் ஆடியோ / லைவ் வீடியோ மற்றும் படங்கள சிங்கிள் கிளிக்கில் அனுப்ப முடியும் கொஞ்சம் வேகமாகவும் இருக்குங்கோ….

4. All new Photos app – இது ஃபோட்டோ பிரியர்களுக்கான புதிய ஆப்ஸ் ஆனாலும் இதில் கூகுள் ஃபோட்டோஸ் ஆப்ஸ் போல ஃபேஸ் ரெக்ககனீஷன் / மற்றும் லொக்கேஷன் படி வரிசையாக படத்தை பட்டியல் போட்டு காட்டும் உதாரணத்திர்க்கு நீங்கள் ரவி என்றவரடும் படம் பட எடுத்திருந்தால் ரவியின் முகம் இருக்கும் அதை கிளிக்கினால் ரவி மற்றும் அவருடன் சேர்ந்த அத்தனை படங்களும் இன் சிங்கிள் சீக்குவன்ஸ்……..

5. New Maps features – ஆப்பிள் இந்த முறை தன் தொடையை தட்டி சபதம் செய்திருக்கிறது – இனிமேல் எங்க மேப் பக்க்கா – சவுகார்பேட்டைக்கு போனும்னா சில்லுகூரிபேட்டைக்கு கூட்டிட்டு போகாதுன்னு பார்ப்போம் – அமெரிக்காவுக்கு ஒகே ஆனா அதர் கன்ட்ரி ஃபெலோஸ் தான் சொல்லனும் அம்புட்டு தூரமாவா போகூதூஊஊஊஊஉனு

6. Apple Music revamp – செம்மையா செஞ்சிருக்காங்க – 9 ஓஎஸ் போல சொதப்பல் அல்ல – ப்ளே லிஸ்ட் / ரேடியோ / ஆல்பம் / ஐடியூன்ஸ் கலெக்ஷன்ன்னு நச்சுனு கலர்ஃபுல்லா இருக்கு இதனால் குழப்பம் இல்லாம பாட்டை கேட்கலாம் – குவாலிட்டி கூட கொஞ்சம் சூப்பர்…..

7. News app updates – சாம்ஸங்க் 6எட்ஜ் / 7 எட்ஜ் நியூஸ் ஆப்ஸ் போலவே இன்னும் கொஞ்சம் புதுமையா பண்ணிருக்காங்க உங்களுக்கு புடிச்ச நாட்டு / சப்ஜெக்ட் கான்ஃபிகர் செய்தா அப்படியே லட்டு மாதிரி லோட் ஆகுது மற்றும் இதன் ப்ரிவியூவை நீங்கள் நியூ ஸ்க்ரீன் லாக்கில் கண்டுகொள்லலாம்.

8. All new Home app – புதுசா நம்மின் வீட்டை கன்ட்ரோல் செய்ய்யும் ஆப்ஸ் – இதற்க்கு ஸ்மார்ட் கேட்ஜெட் ஹோம் கிட் எந்த பிரான்ட்டானுலும் வேலை செய்யும். இதன் மூலம் லைட்டை வெளியே இருந்து ஆஃப் செய்யலாம் வரான்டா லைட் போடலாம் டிவி / ஏசி / மோட்டார் என அத்தனையும் இயக்கலாம் ஆனால் இந்தியாவில் ஸ்மார்ட் கேட்ஜேட் பேஸ் மிக கம்மி அதனால வெயிட் ஆனா கூல் பியூச்சர்.

9. Split view in Safari: – இதில் பிரவுஸிங்கை இரண்டாக தனி தனியாக பார்க்கலாம். ஒரு பிரவுசரில் போஸ்ட் போட இன்னொரு பிரவுஸரில் சூப்பர்னு ஃபேக் ஐடி மூலம் லைக்கும் கமென்ட்டு நமக்கு நாமே திட்டம் போல போடலாம். அதுமட்டும் அல்ல இது பெரிய ஸ்க்ரீன் அல்லது ஐபேடில் சூப்பராக உள்ளது சாமியோவ்.

10. night shift settings – என்னும் இரவு செட்டைங்கை காலை நீங்கள் எழும் வரை செட்டப் செய்தால் தினமும் இரவில் ஃபோன் வந்தா அல்லது பெட்ஷீட் அடியில் இருந்து மெசேஜ் திருட்டுதனமா அனுப்ப முக்கியமா கண் கெட்டு போகாம லோ லைட் ஆனா பிரைட்டா இருக்கு ஏதோ ஒரு டெக்னாலஜி ஆனா மஞ்ச காமாலை கண்ல பாத்த மாதிரி ஒரே எப்பகட்டுங்கோ…….

இன்னும் பல விஷய்ங்கள் உண்மையா சூப்பர் ஓ எஸ் இன்னும் ஐஃபோன் 7 வந்துட்டா இன்னும் களை கட்டும்னு நினைக்கேன். டெவலப்பர்கள் டவுன்லோட் செய்ய்லாம் மற்றவர்கள் பப்ளிக் பீட்டா ஆகஸ்ட்டில் அல்லது ஃபோன் லான்ச் சமயம் அதாங்க அக்டோபர் வரை எறுமைக்காக்கவும்.

மேக் ஓஸ் சியரா கொஞ்சம் படுத்துது அதனால் நல்லா ஆராஞ்சி எழுதுறேன் ஆனா சிரி இனிமே லேப்டாப்பிலும் இந்த வெர்ஷனில் இருந்து வருது.. பை பை……

error: Content is protected !!