மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்! – AanthaiReporter.Com

மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீர் உள்ளிருப்புப் போராட்டம்!

சென்னையின் லேண்ட்மார்க் ஆகி விட்ட மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டதைக் கண்டித்து, கோயம்பேடு அலுவலகத்தில் மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மெட்ரோ ரயில் சங்கம் தொடங்கி பணிகளில் இடையூறு செய்ததாக பணி நீக்கம் செய்யப்பட்டவர் களை உடனடியாக பணியில் சேர்க்க வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில், மெட்ரோ ரயில் ஊழியர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழித்தடங்களில் ஆங்காங்கே மெட்ரோ ரயிலை ஊழியர்கள் நிறுத்தியதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

போரட்டத்தில் ஈடுபட்ட, மெட்ரோ ரயில் சங்கத்தை உருவாக்கிய நிர்வாகிகள் 8 பேரை பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்தும், அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரியும் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் மெட்ரோ ரயில் சேவையில் எந்தவித பாதிப்பும் கிடையாது. மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்ற நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாளை ஊழியர்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

இந்தநிலையில் சற்று முன் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. மெட்ரோ ரயில் ஓட்டுனர்கள் போராட்டுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்