‘மெர்சல்’ டைட்டிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! + சென்சாரில் U/A கிடைத்தது!

‘மெர்சல்’ டைட்டிலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! + சென்சாரில் U/A கிடைத்தது!

அட்லி இயக்கத்தி்ல விஜய் மூன்று வேடங்களில் நடித்து உருவாகியிருக்கும் படம் ‘மெர்சல்’. இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ளது.

இளைய தளபதி விஜய்-க்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் என விஜய்க்கு இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள். மேலும் முக்கியமான வில்லன் கேரக்டரில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலான படத்தின் ஷூட்டிங் முடிந்து, ரிலீசூக்கு தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தடை கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஒரு படத்தின் தலைப்பை பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டால் அதே தலைப்பில் வேறு யாரும் படம் எடுக்கமுடியாது. எனது மகன் ஆரூத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பில் படத்தை தயாரித்து வெளியிட கடந்த 2014-ம் ஆண்டே தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன்.

இந்த நிலையில் ‘மெர்சல்’ என்ற தலைப்பில் தேனாண்டாள் ஸ்டூடியோ உரிமையாளர் ராமசாமி படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ‘மெர்சல்’ என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பை போன்றே உள்ளது.எனவே, தேனாண்டாள் ஸ்டூடியோ நிறுவனமோ, அதன் உரிமையாளரான ராமசாமியோ அல்லது மற்ற நபர்களோ ‘மெர்சல்’ என்ற பெயரைப் பயன்படுத்தி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அக்டோபர் 3-ஆம் தேதி வரை ‘மெர்சல்’ என்ற பெயரில் விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கு வெள்ளிக்கிழமை (இன்று) விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மெர்சல்’ படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியது. அத்துடன் ‘மெர்சல்’ என்ற தலைப்பிலேயே படத்தை வெளியிடவும். விளம்பரப்படுத்தவும் அனுமதி அளித்தது.

ராஜேந்திரன் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது படத்துக்கான தடை நீக்கப்பட்ட நிலையில், விரைவில் இதன் டிரெய்லர் ரலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்ப டுகிறது. இதனிடையே விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவலை இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளர். மெர்சல் படத்துக்கு யு/ஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!