மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம்!

மீண்டும் ஒரு மரியாதை – விமர்சனம்!

கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு – அதாவது 1985ம் ஆண்டு ஆகஸ்ட் வெளியானது பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’. அப்போ ரிலீஸாகி தீபாவளியையும் தாண்டி 150 நாட்களைத் தாண்டி சக்கைப்போடு போட்டது. இத்தனைக்கும் ஆரம்பக் காலக் கட்டத்தில் நடிக்க வேண்டும் என்று வந்தவர்தான் இயக்குநராகி கோலிவுட்டின் இமயமானவர் . இவர் இயக்கிய எத்தனையோ மாஸ்டர் பீஸ்களில் ஒன்றான முதல் மரியாதைக் குறித்து பலரும் ‘வயதான ஒருவருக்கு இளம் பெண் மீது வந்த காதலை அழகாக சொன்ன படம்’ என்று சொல்லி புளங்காகிதப்பட்டார்கள். ஆனால் தற்போது பாரதிராஜா, “ அந்த ‘முதல் மரியாதை’ படத்தில் நான் சொன்னது காதலை அல்ல. அதை யும் தாண்டியது. பேசிப் பழகி, ஈருடல் ஓருயிர் ஆவதுதான் காதல். அது ‘முதல் மரியாதை’ படத்தில் கிடையாது. காதலுக்கு எதிர்பார்ப்பு உண்டு. இருவரும் கைகோத்து நடக்க மாட்டோமா, கட்டிப் பிடிக்க மாட்டோமா என்று நினைப்பது காதல். அதையும் மீறி ஒன்று உண்டு. தாய், தந்தை, சகோதரி பாசத்தை எப்படியும் விவரிக்க முடியாது. இந்த மாதிரியான அன்பை எல்லாம் தாண்டி ஒன்று உள்ளது. அதற்கு இன்னும் சரியான பெயர் வைக்கவில்லை. அது தான் ‘முதல் மரியாதை’” என்றெல்லாம் புது விளக்கம் கொடுத்திருந்தார். தன் விளக்கத்தை நிரூபிப்பதற்காகவே மீண்டும் ஒரு மரியாதை என்றொரு படத்தையும் கொடுத்து அசத்த முயன்று இருக்கிறார் இயக்குநர் இமயம்..!

கதை என்னவென்று கேட்டால் நாயகன் பெயரே ஓம்.. அதாவது ஓல்ட் மேன். அந்த பெயருடன் உலா வரும் பாரதிராஜா – தேனியில் உள்ள கிராமத்தில் ஒரு விவசாயியாக, எழுத்தாளராக வாழ்க்கை ஓட்டி வருகிறார். அவரது ஒரே மகன் லண்டனுக்கு படிக்க சென்றவன் அங்கேயே குடியுரிமை பெற்று வாழத் தொடங்குகிறான்.அங்கேயே ஒரு பெண்ணை கல்யாணம் செய்து இரண்டு குழந்தை களுடன் செட்டில் ஆகி விடுகிறான்… ஒரு கட்டத்தில் லண்டனில் இருந்து தேனி கிராமம் வந்த தன் மகன் அழைத்தான் என்ற காரணத்துக்காக லண்டன் சென்றவர் அங்கு நேர்ந்த ஒரு சூழலால் அநாதை ஆக்கப்பட்டு ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்க்கப்படுகிறார். அங்கு தங்கி இருந்தவரின் பக்கத்து பெட் பெரிசின் வேண்டுகோள் படி ஹோமில் இருந்து வெளியேறியவர் வழியில் தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஓர் இளம் பெண் (?))ணை சந்திக்கிறார். இந்த இரண்டு விரக்தியான ஜீவன்களும் பத்து நாட்கள் எங்கெங்கோ பயணம் செய்கிறார்கள்.. அப்படி செல்லும் போது யார், யாருக்கு வழி காட்டி, இருவருக்குமான உறவு எப்படியானது? முத்தாய்ப்பாக சொல்ல வந்த விசயம் என்ன என்பதுதான் படத்தின் கதை..

நாயகர்(!) பாரதிராஜா இயக்கத்தில் மட்டுமல்ல நடிப்பில் கூட இமயம் என்று சில பல முன்னணி ஹீரோக்கள் நம்மிடமே சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால் அதெல்லாம் பொய்யா கோபால் என்று கதறும் அளவுக்கு இம்மெச்சூரிட்டியாக இந்த மீண்டும் ஒரு மரியாதையில் தன் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.. அதாவது குழந்தையோ, பெரியவரோ தன் முகத்தை கண்ணாடியில் காணும் போது அழகாக இருக்க வேண்டும் என்று நினைப்பது வழக்கம். ஆனால் இயல்புக்கு மாறாக உள்ளது உள்ளபடி காட்டுகிறேன் என்று தினவெடுத்து மூக்கு முடிகளைக் கூட புடைக்க வைத்துக் காட்டும் அளவுக்கதிகமான குளோஸ் அப் காட்சிகளை இமயம் மறுபடியும் பார்க்கவில்லை என்றே நம்புகிறோம்..அதே சமயம் நம் எல்லோருக்கும் மிகப் பரிச்சயமான பாரதிராஜா வாய்ஸ் ஓவர்கள் இந்த குறைகளை மங்கலாக்கி விடுவது நமக்கு மட்டுமதானா? என்று தெரியவில்லை.. அதே போல் தான் நாயகியின் ரோல்.. லண்டன் மண்ணில் இருந்தே நாயகி உருவானதாகக் காட்டியதால் நம் மண்ணுடன் – அதாவது இந்த பாரதிராஜாவின் கதையுடன் சரியாக ஒட்டவில்லை.. ஆனால் அதையும் தன் பால்ய சிநேகிதன் வைரமுத்து மகனான மதன் கார்க்கி-யின் வசனங்கள் மூலம் மறைத்து அல்லது மறக்கடிக்கும் வித்தையை செய்து விடுகிறார்.

இந்த படத்தில் ரியல் ஹீரோ & ஹீரோயின் யாரென்று கேட்டல் கண்ணை மூடிக் கொண்டு சாலை சகாதேவன் என்று உரக்கச் சொல்லி விடலாம்.. அன்னரின் ஒளிப்பதிவு ஒட்டு மொத்த லண்டன் அழகை அந்த நாட்டு ராணியே பார்க்காத கோணத்தில் கொண்டு வந்து குவித்திருக்கிறார். பின்னணி இசையை அழகாக வழங்கிய மியூசிக் டைரக்டரிடம் பாடல்களை நம்ம பாரதிராஜா-பாணியில் வழங்க மிஸ் பண்ணியதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை..

இது போல் அது சரியில்லை.. இது சரியில்லை என்று சிலவற்றை சொல்லும் போதே அது பிரமாதம் & இது பிரமாதம் என்று சொல்ல எல்லா படங்களைப் போல்தான் இதுவும் என்றாலும் ஒரு கிராமத்தைக் கூட செட் போட்டு இதுதான் சினிமா என்று காட்டி வந்த காலக் கட்டத்தில் கிராமத்தில் செட் போட்டு சினிமா எடுத்தவர் இந்த பாரதிராஜா.. இவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்திற்கு ஒரு மேக்சின் 62.5 மதிப்பெண் கொடுத்ததுதான் ரொம்ப வருசமா இருந்த ரிக்கார்ட்,

அப்பேர்ப்பட்டவர் ரிக்கார்ட்- அவராலேயே முறியடிக்கப் பட வேண்டும் என்பது கோலிவுட் ரசிகனின் ஆசை.. ஆனா அதே யோசனையோடு ஆடுகளத்தில் இறங்கி அதுவும் முழுக்க அந்நிய மண்ணில் ஒரு புது விதையை தூவியிருக்கும் பாரதிராஜா-வின் உழைப்பையும், உணர்வையும் புரிந்து கொள்ளவே இந்த படம் உதவும்..

மொத்தத்தில் மீண்டும் ஒரு மரியாதை – சல்யூட்

மார்க் 2.75 / 5

error: Content is protected !!