இந்தியாவில் 10000 கோடி டாலர் முதலீடு! – சவுதி இளவரசர் தகவல்!

இந்தியாவில் 10000 கோடி டாலர் முதலீடு! – சவுதி இளவரசர் தகவல்!

நம் நாடு பாகிஸ்தானை தவிர எல்லோருக்கு நேச நாடுதான். அதே சமயம் எண்ணெய் வள நாடான அரேபியா நம் இந்தியாவை வைத்து பல பில்லியன் டாலர் சம்பாதிக்க் கொண்டே போவது ஒரு பக்கம் என்றாலும் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 3 வருடங்களில் இந்தியாவில் 44 பில்லியன் டாலர் அதாவது 4,400 கோடி டாலர்களை சவுதி அரேபியா முதலீடு செய்துள்ளது. அடுத்த சில வருடங்களில் இன்னும் 10,000 கோடி டாலர் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்று சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

2 நாள் அரசுமுறை பயணமாக சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று இரவு இந்தியா வந்தடைந்தார். விமான நிலையம் வந்தவரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாணியில் (அவரே இளவரசருக்கு கார் ஓட்டி அசத்தினார்- அதே பாணியில்) மரபுக்கு மாறாக விமான நிலையத்துக்குச் சென்று, விமானத்தில் இருந்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், இறங்கியதும் பிரதமர் மோடி கட்டித் தழுவி வரவேற்றார்.

பின்னர் ராஷ்டிரபதி பவனில் இன்று சவுதி பட்டத்து இளவரசர் சல்மானுக்கு அரசுமுறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சவுதி பட்டத்து இளவரசர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை அடுத்து பின்னர் பிரதமர் நரேந்திர மோடி – சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இடையிலான பேச்சுவார்த்தை டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று நடைபெற்றது.

இதில் புல்வாமா தாக்குதலினால் இந்தியா – பாகிஸ்தான் உறவில் ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், தீவிரவாதத்துக்கும் ஆதரவளிக்கும் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.

இந்த சந்திப்பில், இருதரப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் கலந்தாலோசித்தனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பயங்கரவாத்த்துக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சவுதி ஒத்துழைப்பு தரும்; சவுதி தான் திரட்டும் புலனாய்வுத் தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் எனவும் கூறினார்.

மேலும் முதலீடு பற்றி சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் குறிப்பிட்டார். 2016ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கு வந்திருந்தார். அப்பொழுது பேசப்பட்ட பல கருத்துக்கள் சவுதி அரேபியாவுக்கு லாபம் தரும் நிலையில் அமைந்தன.இந்தியாவில் பத்தாயிரம் கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாங்கள் இருவரும் நம்புகிறோம். இந்த முதலீடுகள் இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் லாபம் தருவதாக அமையும் என சல்மான் குறிப்பிட்டார்.

பெட்ரோலிய ரசாயன பொருள்கள், எண்ணெய் பொருள்கள், எரிசக்தி பொருள்கள் ஆகியவற்றை சேமித்து வைக்கும் அமைப்புகளில் எங்களுடைய முதலீட்டை விரிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம்.

சவுதியில் உள்ள இந்தியர்களுக்கும் இந்தியாவில் உள்ள சவுதி அரேபியர்களுக்கும் லாபம் தருவதாக இந்த உறவு அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.

இந்தியா ஐடி துறையில் முன்னணியில் உள்ளது. இந்தியாவைப் பார்த்து நாங்களும் இப்போது ஐடி துறையில் முதலீடு செய்யத் துவங்கியிருக்கிறோம். சவுதி அரேபியாவில் ஐடி துறையில் நாங்கள் செய்த முதலீடுகள் காரணமாக நல்ல பலன் கிடைத்துள்ளது. இவ்வாறு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் செய்தியாளர்களிடம் கூறினார்.

error: Content is protected !!