மாயவன் -திரை விமர்சனம்! =தமிழுக்கு தேவையான சினிமா!

மாயவன் -திரை விமர்சனம்! =தமிழுக்கு தேவையான சினிமா!

எழுத்தாளர் சுஜாதா எண்பதுகளில் எழுதிய பேசும் பொம்மைகள் நாவலில் வரும் மூளையை பிரதி எடுக்கும் கருதான் மாயவன். இந்த மாயவனில் அந்த சுவாரசியத்தை இறுதி வரை பேணி சயின்பிக்சன் திரில்லராக மாற்றியிருக்கிறார் இயக்குநர் c v குமார். வரிசையாக சில கொலைகள் ஒரே மாதிரி நடக்க கொலையாளியை கண்டுபிடித்து நெருங்கும்போது அனைவரும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் அதறகான விடை தேடி அலைய அது மிகப் பிரமாண்டமான மாய கண்டு பிடிப்புக்குள் இழுத்து செல்வதுதான் கதை.

சிவி குமார் தன் முதல் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதை தான் இந்தப்படத்தின் பெரும்பலம். அதாவது
நம் நியூரான் செல்களில் இருக்கும் நினைவுகளை மொத்தமாக சேகரித்து வேறொரு உடலுக்கு அதைக் கடத்த முடியுமென்றும், அதன்மூலம் ஒருவர் நினைத்தால் எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் வெவ்வேறு உடல்களில் கூடுவிட்டு கூடு பாய்ந்து வாழ முடியும் என்ற உண்மைக்கான திரைக்கதை சில இடங்களில் தடுமாறினாலும் கடைசிவரை பரபரப்பை தக்க வைத்ததில் ஜெயித்திருக்கிறார். குறிப்பாக சயின்பிக்ஸன் திரில்லர் என்று தமிழில் புதுமையாய் யோசித்து அதற்காக நலன் குமரசாமி. உதவியுடன் இணைத்துள்ள ரியல் சேதிகள் அத்தனையும் அருமை

ஆனால்  படத்தில் லாஜிக்காக பல கேள்விகளுக்கு விடையே இல்லை. காஸ்டிங் இந்தப்படத்தின் மிகப்பெரிய சொதப்பல். அதிலும் நாயகன் சந்தீப் ஒட்டு மீசையுடன் போலீஸ் வேடத்தில் ஒட்டவே இல்லை. அதுவும் இன்வெஸ்டிகேசன் போலீஸின் அந்த கம்பீரம் அவரிடம் கொஞ்சமும் வரவில்லை. அவராய் இதில் எதுவும் கண்டுபிடிக்கவே இல்லை. எல்லாம் தானாகவே நடக்கிறது . ஒரு திரில்லர் படத்தில் விடையை நெருங்கும்போது ரசிகனை கூடவே அழைத்துக்கொண்டு துப்புதுலக்க வேண்டும் இதில் அதை மிஸ்ஸ்சிங். மிக எளிதாய் விடைகள் வந்து விழுகின்றன. படத்தின் முக்கிய பாத்திரங்கள் படத்திலோ கதையிலோ எந்த பெரிய மாற்றத்தையும் கொடுக்கவில்லை. மூளைதான் மெயின் ரோல் என்று நினைத்து படத்தில் எல்லா மே ட்ய்தா நடப்பது போல் கொண்டு போயிருப்பது  பெரிய மிஸ்டேக்.

ஜாக்கி ஷராப், டேனியல் பாலாஜி, ஹிரோயின் லாவண்யா ஆகியோரெல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பகவதி பெருமாளுக்கு (பக்ஸ்) நைஸ் ரோல்.பாடல்கள் காதல் காட்சிகள் இல்லாதது பெரும் ஆறுதல். 2037 எனக்காட்டப்படும் போதும் இளையராஜா பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதை நம்பினாலும் அந்த கால சென்னைக்காக கொஞ்சம் மூளையால் உழைத்திருக்கலாம். கதை தமிழ் பேசுகிறார்கள். ஆனால் வேறெங்கோ நடப்பது போல் இருக்கிறது.

இசையில் ஜிப்ரான் தன் பங்கை அழுத்தித் தந்திருக்கிறார். ஒலிப்பதிவு சிக்கனத்தில் பிரமாண்டம் காட்ட முயற்சித்திருக்கிறது. எடிட்டிங் கடைசிக் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி வைத்திருக்கலாம். அதே சமயம் தன் நேம் கார்ட்டை போட்டு விட்டு தொடரும் சாவை தடுக்க நடக்கும் ஆராய்ச்சியாளர்கள் குறித்த விபரத்தைப் போடு அந்த லிஸ்டில் தன்னையும் சேர்த்து கொண்ட யுக்தி சபாஷ் சொல்ல வைத்தது.

மொத்தமாய் இது தமிழுக்கு வரவேற்பு முயற்சி. அதில் முழுதாய் ஜெயிக்காவிட்டாலும் சரியான முயற்சிதான். அதைப்பார்க்கும் விதத்தில் தந்ததற்கு வாழ்த்துக்கள் c v குமார். மாயவன் தமிழுக்கு தேவையான சினிமா.

மார்க் 3 / 3.25

 

கதிரவன்

error: Content is protected !!