உலக மகளிர் குத்துச்சண்டை ; மேரிகோம் 6வது முறையாக தங்கம் வென்று சாதனை!

உலக மகளிர் குத்துச்சண்டை  ; மேரிகோம் 6வது முறையாக தங்கம் வென்று சாதனை!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெற்றி பெற்று மேரி கோம் 6வது முறையாக இன்று தங்கம் வென்றார். இதன் மூலம் ஆடவர் பிரிவில் கியூபாவின் பெலிக்ஸ் சேவன் 6 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை செய்துள்ளர், அவருடன் தற்போது மேரி கோம் இணைந்து தனித்துவமான உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் நேற்று இறுதி போட்டிகள் நடைபெற்றன. அதில் 48 கிலோ எடை பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மேரி கோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொண்டார். இந்த போட்டியில் மேரி கோம் 5-0 என்ற கணக்கில் புள்ளி கணக்கில் ஒகோட்டோவை வீழ்த்தி மேரி கோம் 6வது முறையாக தங்க பதக்கத்தினை வென்றுள்ளார். இவர் 8 வருடங்களுக்கு பின் மீண்டும் இன்று தங்கப் பதக்கத்தை வென்றார். உலக சாம்பியன்ஷிப் குத்து சண்டையில் கடைசியாக மேரி கோம் 2010ல் பதக்கம் வென்றார்.

மேரி கோம் 2001ம் ஆண்டியில் இருந்த குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரை 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

மேரி கோமை அடுத்து மற்றொரு இந்திய வீராங்கனை சோனியா சாஹல் 57 கிலோ எடைப்பிரிவில் இறுதி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில், உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!