உங்க ஹெல்மெட்-டில் ஐ.எஸ்.ஐ.முத்திரை இருக்கா?

உங்க ஹெல்மெட்-டில்  ஐ.எஸ்.ஐ.முத்திரை இருக்கா?

இருச் சக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிகளை மதிக்காமல், தலைக்கவசங்கள் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்து போகிறார்கள். இதை தடுக்க போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டிகள் எப்பொழுதும் தலைக்கவசத்தை அணிய வேண்டும் என தொடர்ந்து கூறிவருகின்றனர். விழிப்புணர்வு மூலமா கவும், துண்டுப் பிரசு வழங்கிய தலைக்கவசங்களின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

அதே சமயம் பலர் தலைக்கவசம் அணிந்தாலும், அது பாதுகாப்பானதா? நல்ல தரம் வாய்ந்ததா? என்று கூட பார்ப்பதில்லை. ஏதோ போக்குவரத்து போலீசாரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் சந்தையில் விற்கும் மலிவான ஹெல்மெட் வாங்கி, தங்கள் பாதுகாப்பை குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் அணிந்து செல்கிறார்கள். இதுவும் உயிருக்கு ஆபத்தானது தான் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

எனவே வாகன ஓட்டிகளை பாதுகாக்க மத்திய அரசு ஒரு புதிய விதிகளை வகுத்துள்ளது. இதுக் குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “வரும் ஜனவரி 15 முதல் ஐ.எஸ்.ஐ சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தலைக்கவசங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றி தரமான ஹெல்மெட்டுகளை தயாரிக்க வேண்டும். அப்படி தயாரிக்க தவறும் பட்சத்தில், அந்த நிறுவனங் களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது தரமில்லாத ஹெல்மெட்டு களை விற்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். புதிய விதிகள் படி, ஹெல்மெட்டுகளை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை எந்த உத்தரவாதமும் (வாரன்ட்) இல்லாமல் கைது செய்யப்படலாம்.

அட்சினல் ரிப்போர்ட்:

ISI முத்திரை இல்லாத ஒரு ஹெல்மெட் 75- 150 ரூபாய் வரையில் விற்கப்படுகிறது. ஆனால், ISI முத்திரை உள்ள ஒரு ஹெல்மெட் 800- 3 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை ஆகி வருகிறது. இதனிடையே ஜனவரி 15 முதல் அமலாகும் புதிய உத்தரவில், ஹெல்மெட் உற்பத்தியாளர்கள் ஒரு ஹெல்மட்டுக்கான அதிகப்பட்ச எடையை 1.5 கிலோவில் இருந்து 1.2 கிலோ ஆகக் குறைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. தடை உத்தரவு அமலானதிலிருந்து கூடுதலாக இரண்டு மாத காலத்துக்குக் கருணைக் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அந்த 2 மாத காலத்துள் ISI முத்திரை உடன் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்றும் ISI முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகளை விற்பனையாளர்களும் ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!