பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை: மகாராஷ்டிர அரசு உத்தரவு

பள்ளிகளில் நொறுக்கு தீனிக்கு தடை: மகாராஷ்டிர அரசு உத்தரவு

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் ஊட்டச்சத்துக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து இருந்தது. கொழுப்பு,உப்பு மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளினால் உடல்பருமன், சர்க்கரை நோய், பற்கள் மற்றும் இதயப்பிரச்னைகள் ஏற்படும் என்று இந்த கிமிட்டி பரிந்துரை செய்து இருந்தது. பள்ளி குழந்தைகள் இடையே ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை செய்தது. அதை அடிப்படையாக கொண்டு பள்ளி கேன்டீன்களில் நூடுல்ஸ், சிப்ஸ், பொரித்த உணவுகள் போன்ற துரித உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை விற்க மகாராஷ்டிரா அரசு தடைவிதித்து இருக்கிறது.துரித உணவுகளால் மாணவர்களுக்கு உடல் பருமன் உண்டாவதால் அம்மாநில அரசு இந்த தடையை விதித்துள்ளது. இதற்கு பதிலாக, பள்ளி மாணவர்களுக்கு சாதம், சப்பாத்தி, காய்கறிகள், கோதுமை உப்புமா, இட்லி, வடை, சாம்பார், இளநீர் உள்ளிட்ட சத்து நிறைந்த இயற்கை உணவுகள் தர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

maha may 10

இது குறித்து மகாராஷ்டிரா மாநில பள்ளிக் கல்வி துறை வெளியிட்ட அரசின் தீர்மான அறிக்கையில், ‘‘அதிக கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை (ஹெச்.எஃப்.எஸ்.எஸ்) கொண்ட உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. சொல்லப் போனால் உடல்பருமன் ஏற்படுவதற்கும், அது சார்ந்த பிற நோய்கள் உருவாகவும் தான் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. பள்ளி முதல்வர்கள் இந்த தடை அமல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நொறுக்கு தீனிகளுக்கு மாற்றாக சப்பாத்தி, சாதம், காய்கறிகள், கோதுமை உப்புமா, கிச்சடி, பாயாசம், இட்லி, சாம்பார் வடை, இளநீர், எலுமிச்சை சாறு ஆகியவை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் கேன்டீன்கள் இயங்கவில்லை என்றாலும், கடைகளில் இருந்து வரவழைக்கப்பட்டு உணவு இடைவேளையின்போது மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதையும் பள்ளிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான உணவுகள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசின் இந்நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ரெமிடியோஸ் கூறும்போது, ‘‘அதிகப்படியான செயற்கை சர்க்கரை கொண்ட உணவுப் பொருட்களை மனித உடல் ஏற்றுக் கொள்ளாது. இந்த அளவு சர்க்கரை வெகு எளிதில் கொழுப்பாக மனித உடலில் சேர்ந்து விடும். இன்சுலின் சுரப்பும் பாதிக்கப்பட்டு நீரழிவு நோயை உண்டாக்க கூடும்’’ என்றார். இந்திய நீரழிவு சங்க துணைத் தலைவர் ஜெக்மீத்தும் இம்முடிவை வரவேற்றுள்ளார்.

Related Posts

error: Content is protected !!