சண்டக் கோழி 2 படத்திற்க்காக சென்னையில் மதுரை உருவாகிறது! – AanthaiReporter.Com

சண்டக் கோழி 2 படத்திற்க்காக சென்னையில் மதுரை உருவாகிறது!

நடிகர் விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ படம் சூப்பர் ஹிட்டானது. பாக்ஸ் ஆபீஸில் வசூலைக் குவித்தது. அப்படத்தில் மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடித்திருந்தார். மலையாள நடிகர் லால், ராஜ்கிரண், ‘தலைவாசல்’ விஜய், சண்முகராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் ரிலீசாகி பன்னிரண்டு  ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்குவதாக இருந்தது. இதை இயக்குனர் லிங்குசாமியும், விஷாலும் உறுதியாக அறிவித்தனர். இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளும் பரபரவென தொடங்கின.

இந்த நிலையில் சில மாதங்கள் கழித்து ‘சண்டக்கோழி 2’ படம் டிராப் ஆகிவிட்டதாக விஷால் திடீரென தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். லிங்குசாமி ‘சண்டக்கோழி 2’ படத்தை தொடங்காமல், தெலுங்கில் சிரஞ்சீவியின் மைத்துனரும், நடிகருமான அல்லு அர்ஜுன் படத்தை இயக்கச் சென்றதே அதற்குக் காரணமாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், ‘சண்டக்கோழி-2’வுக்கு புத்துயிர் கொடுக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து ஷூட்டிங் நடத்த முடிவானது. இதை அடுத்து சென்னையில் அழகான மதுரையை உருவாக்கும் பணியில் பட குழுவினர்கள்தொடங்கி விட்டார்கள். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஆகஸ் 31-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

தற்போதைய பிளான் படி விஷால் பிலிம் பாக்டரி (VFF) தயாரிப்பில் புரட்சி தளபதி விஷால் நடிக்க இருக்கும் 25-வது படம் சண்டைகோழி -2. அப்படத்தின் பிரம்மாண்டமான செட்தான் சென்னை பின்னிமில்லில் 10எக்கர் நிலபரப்பில் 500கடைகள், கோவில் திருவிழா கொண்டாட்டம் தொடங்க அழகான மதுரையை 6- கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கி உள்ளனர்கள். அதற்கான பூஜை இன்று காலை பின்னிமில்லில் விஷால் பிலிம் பாக்டரி (VFF) இணை தயாரிப்பாளர் .M.S.முருகராஜ், இயக்குனர் .N.லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்கள்.