45 வயதுக்கும் குறைவான விதவையை மணந்தால், ரூ.2லட்சம் அன்பளிப்பு! ம.பி. அரசு அறிவிப்பு. – AanthaiReporter.Com

45 வயதுக்கும் குறைவான விதவையை மணந்தால், ரூ.2லட்சம் அன்பளிப்பு! ம.பி. அரசு அறிவிப்பு.

விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும்வகை யில், விதவையை மணக்கிறவர்களுக்கு ரூ.2லட்சம் பரிசுத்தொகையை ம.பி. சமூக நீதித் துறை அறிவித்துள்ளது. அந்த விதவை, 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே இப்படி ஒரு திட்டத்தை முதன்முறையாக ம.பி. அரசு அறிவித்தி ருக்கிறது. ஆண்டுக்கு 1000 விதவைகள் மறுமணம் நடக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது. அதே சமயம் இதுவரை எத்தனை விதவைகள் மறுமணம்செய் துள்ளனர் என்ற புள்ளிவிவரம் அரசிடம் இல்லை. ஆனால் 10 லட்சம் விதவைகள் மறுமணம் நடக்கும் எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறினர்.

முன்னதாக இந்த விதவைகள் மறுமணம் பற்றி மத்தியஅரசுகொள்கை வகுக்கும்படி சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கூறியிருந்தது. அதன் அடிப்படையிலேயே நாட்டிலேயே முதன் முறையாக விதவை கள் மறுமணத்துக்கு ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தை ம.பி. அரசு கொண்டு வந்துள்ளது. பணத்துக்காக விதவையை மறுமணம் செய்வதை தடுக்கும் வகையில், சில நிபந்தனைகளையும் அரசு வகுத்துள்ளது.

அதன்படி, விதவையை மணக்கிறவருக்கு இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத் தில் இந்த திருமணம் பதிவு செய்யப்படவேண்டும். கிராம பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தருகிற விதவை மறுமணச்சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.