கேபினட் கூட்டத்துக்கு மதியம் வீட்டிலே இருந்து சாப்பாடு எடுத்து வரணும்- – ம.பி. முதல்வர் அதிரடி – AanthaiReporter.Com

கேபினட் கூட்டத்துக்கு மதியம் வீட்டிலே இருந்து சாப்பாடு எடுத்து வரணும்- – ம.பி. முதல்வர் அதிரடி

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இம் மாநிலத்தின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடக்கிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. 12 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் நீண்ட நேரம் நடக்கிறது.

mp may 2a

குறிப்பாக 6 முக்கிய பிரச்சனை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். மந்திரி சபை கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள் அனைவரும் மதிய உணவை கையில் எடுத்து வருமாறு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த உத்தரவால் அமைச்சர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இப்படி ஒரு உத்தரவு இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது இல்லை. அரசு செலவிலேயே மதிய உணவு வழங்கப்படும். தற்போது முதல் முறையாக மந்திரி சபை கூட்டத்துக்கு மதிய உணவு கொண்டு வருமாறு உத்தரவிட்டதால் அமைச்சர்கள் அனைவரும் ஆச்சரியமும் அப்செட்டும் அடைந்து உள்ளனர்.

சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சிவ்ராஜ்சிங் சவுகான் அமைச்சரவையில் 20 கேபினட் அமைச்சர்களும், 9 இணை அமைச்சர்களும் உள்ளனர்.