அண்ணாதான் தமிழக அரசியல் வழிகாட்டி! – எம்.நடராஜன் – AanthaiReporter.Com

அண்ணாதான் தமிழக அரசியல் வழிகாட்டி! – எம்.நடராஜன்

நேற்று தமிழகத்தின் வரலாற்று நாயகன் அண்ணாவின் 49வது நினைவு நாள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்கள் அண்ணாவுக்கு தங்கள் மரியாதையைச் செலுத்தினார்கள்.அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் எம் நடராஜனும் அண்ணாவுக்கு தன் அஞ்சலியைச் செலுத்தினார்.

அண்மையில்தான் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் நடராஜன். உடல் நிலை சரியில்லாத நிலையில், வெளியில் செல்லக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அண்ணாவுக்கு தன் அஞ்சலியை அவர் வீட்டிலேயே செலுத்தினார்.

அண்ணாவின் படத்துக்கு மாலை அணிவித்து தன் மரியாதையை செலுத்திய நடராஜன், “தமிழகத்தின் வரலாற்று நாயகன் அண்ணா. தமிழகத்தின் சரித்திரம் அண்ணாவுக்கு முன், பின் என்றுதான் எழுதப்படும். தமிழர்களின் சுயமரியாதை, தமிழகத்தின் தனித்தன்மையைக் காப்பாற்றிய பெரும் தலைவர் அறிஞர் அண்ணா… அவரை அரசியல் வழிகாட்டியாகப் பெற்றது தமிழினத்தின் பெருமை,” என்றார்.