அனாமதேயமாக தமிழீழ விடுதலைப்புலிகள்! – குழப்பம் ஏற்படுத்தும் புது சர்ச்சை! – AanthaiReporter.Com

அனாமதேயமாக தமிழீழ விடுதலைப்புலிகள்! – குழப்பம் ஏற்படுத்தும் புது சர்ச்சை!

சர்வதேச அளவில் இன்றைக்கும் பூதாகரமான இயக்கமாக அறியப்படும்  விடுதலைப் புலிகள்  பெயரில் போன டிசம்பர் 1 ல்  அறிக்கையொன்று வெளியானது. அது குறித்த நம் ஆந்தை ரிப்போர்ட்டர்-ல் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம்: ‘ராஜீவ் கொலையில் எங்களுக்குத் தொடர்பில்லை’ என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்தச் சூழலில் நான்கு நாட்கள் கழித்து விடுதலைப் புலிகள் பெயரில் மீண்டும் ஓர் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்டவர், ப.யாதவன் , இணைப்பாளர், தலைமைச் செயலகம் , தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதில், “ அன்பான தமிழ் மக்களே! தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அதிகாரபூர்வ இலட்சினையைப் பாவித்து 01.12.2018 அன்று இரு தனி நபர்களால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் எமக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்தோடு இப்படியான அனாமதேயமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அதிகாரபூர்வ இலட்சினையைப் பாவித்து அறிக்கைகளையும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிடுவதனையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களினால் கண்ணியமாகவும், கட்டுக்கோப்புடனும் வளர்த் தெடுக்கப் பட்ட, பல்லாயிரம் மாவீரர்களின் தியாகங்களினாலும் அர்ப்பணிப்புக்களினாலும் உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பையும் அதன் உத்தியோகபூர்வ இலட்சினை களையும் தவறாக பாவிக்க வேண்டாமெனவும் மிகவும் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ஒரிஜினல் விடுதலைப் புலிகள் யார்? ஏனிப்படி தேவையில்லாமல் அறிக்கை விட்டு குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என்று புரியாமல் போய் விட்டது!