ஜப்தி செஞ்ச பணத்தை அப்பவே ரிட்டர்ன் பண்ணியாச்சு! – சுப்ரீம் கோர்ட்டை கடுபேற்றிய மத்திய அரசு! – AanthaiReporter.Com

ஜப்தி செஞ்ச பணத்தை அப்பவே ரிட்டர்ன் பண்ணியாச்சு! – சுப்ரீம் கோர்ட்டை கடுபேற்றிய மத்திய அரசு!

நடக்கும் தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் நாடு முழுக்க கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்களை கண்டு பிடிக்க பறக்கும் படைகள் அதிரடி சோதனைகள் நடத்தின. இதில், இந்தியா முழுக்க இதுவரை மொத்தம் 3,399.33 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் போன பார்லிமெண்ட்  தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணம், அடுத்த ஒரு மாதத்தில் திருப்பி தரப்பட்டுவிட்டதாக  சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருக்கிறது.  இதற்கு, சுப்ரீம் கோர்ட் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்ட, பணம், நகை உள்ளிட்டவற்றின் நிலை என்ன? எனக்கோரி  சுப்ரீம் கோர்ட்டி ஒருல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.  அதில், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட 303 கோடி ரூபாய் ரொக்கம், ஒரே மாதத்தில் அவரவரிடம் திருப்பி தரப்பட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.  இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கும் சுப்ரீம் கோர்ட், பணத்தை பாதுகாப்பாக வைத்திருந்து திருப்பிக் கொடுக்கவா? பறிமுதல் செய்தீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது.

பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும் விஷயத்தில், தேர்தல் ஆணையத்திற்கும், நடவடிக்கை எடுக்கும் மாநில அரசுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டிய மத்திய அரசு, தனது கடமையை விட்டு விலகியிருக்கலாமா? என்றும் சுப்ரீம் கோர்ட் வினா எழுப்பியிருக்கிறது. இனி வரும் காலங்களிலும், இதே தவறை இழைத்தால், வருமானவரித்துறை உள்ளிட்டவற்றின் அதிகாரங்களை, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க நேரிடும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. அதே சமயம் நடப்பு பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 812 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட  3 ஆயிரத்து 370 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், மதுபானம், போதைபொருட்கள், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக்கும்.