தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எங்கள் தலைவி குஷ்பு! – விஷால் அறிவிப்பு

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எங்கள் தலைவி குஷ்பு! – விஷால் அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர்களாக கதிரேசன், தேனப்பன் பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.

kuspoo jan 1

தற்போது, இவர்கள் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று இரவு சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பிப்ரவரி 5–ந் தேதி தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

சங்கத்தில் ஆயிரத்து 201 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு போட்டு தலைவர், 2 துணை தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்கிறார்கள்.

இதையடுத்து வழக்கம் போல் இந்த ஆண்டும் பலர் தனி தனி குழுக்களாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட முயற்சித்து வருகிறார்கள். இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி முடிவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 13-ந்தேதி. இறுதி வேட்பாளர் பட்டியல் 18-ந்தேதி வெளியிடப்படும்.

இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. ஒரு அணி சார்பில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார்.

இவரது அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், செயலாளர்கள் பதவிக்கு கேயார், கதிரேசன் பொருளாளர் பதவிக்கு எஸ்.வி.சேகர் அல்லது கமீலா நாசர் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இன்னொரு அணியில் டி.சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகிறார்கள். மற்றொரு அணியில் தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணனும், செயலாளர்கள் பதவிக்கு மன்னன், சிவசக்தி பாண்டியன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு நடிகை தேவயானியும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே சமீபத்தில் விஷால் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. இதன் முதல் முயற்சியாக விஷால் தலைமையிலான அணியின் சார்பாக தலைவர் பதவிக்கு திருமதி. குஷ்பு சுந்தர் போட்டியிடவுள்ளார் என்றும் மற்ற நிர்வாகிகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளார் விஷால்.

error: Content is protected !!