குரங்கு பொம்மை- திரை விமர்சனம்!

குரங்கு பொம்மை-  திரை விமர்சனம்!

நம்மில் பலருக்கு கேளிக்கையாகவும் சிலருக்கு வாழ்க்கையாகவும் மாறி விட்ட கூத்து, நாடகம், ஊமைப் படம், கருப்பு வெள்ளைப்படம், முப்பரிமாணம்(3டி), நெகட்டிவில் படம், டிஜிட்டல் படம் என (தமிழ்) திரையுலகம் அடுத்தடுத்து தன்னை அப்டேட் செய்து கொண்டு வளர்ந்ததால்தான் நூறாண்டு கண்டு கம்பீரமாக இருக்கிறது. அதே சமயம் ஆண்டுதோறும் 500 படங்களுக்கு கோலிவுட்டில் பூஜை போடுகிறார்கள். ஆனால் திரைக்கு வருவது 200-ல் இருந்து 250 படங்கள்தான். இதில் லாபம் கிடைப்பதும் அசல் தேறுவதும் சில படங்களுக்கு மட்டும்தான் என்ற நிலையில் தமிழ் திரையுலகை நம்பி வாழும் அத்தனை பேரும் பார்த்தே ஆக வேண்டிய படம் என்று குரங்கு பொம்மை’ யை குறிப்பிடலாம்.

இப்படம் குறித்து இயக்குநர் நித்திலன் ஆரம்பத்தில் “இந்தப் படம் என்னுடைய முதல் குறும் படமான ‘புதிர்’ தாக்கத்தின் காரணமாக உருவானது. மனிதனுடைய மனது குரங்கு போன்று தாவிக் கொண்டேயிருக்கும். அதன் குறியீடுதான் இந்த ‘குரங்கு பொம்மை’ படம். ஒரு நல்லவனுக்கும், கெட்டவனுக்கும் இடையே இருக்கும் நட்பை கதைக் கருவாக வைத்துதான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.  முன்னர் சொன்னது சொன்ன படி எடுத்திருந்த     இப்படத்தின் கதைச் சுருக்கம் என்னவென்றால் ஐம்பொன் உள்ளிட்ட சிலைக் கடத்தும் ஆசாமி தேனப்பன். இவர் ஐந்து கோடி மதிப்புள்ள சிலையை தனது பால்ய கால சிநேகிதன் பாரதிராஜாவின் மூலமாக தஞ்சையிலிருந்து சென்னைக்கு ஒரு குரங்கு பொம்மை போட்ட பையில் போட்டு அனுப்பி விற்க முயல்கிறார். தேனப்பனின் கூடா நட்புதான் என்றாலும் தன் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் என்ன ஏது என்று கூட கேட்காமல் பையை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கிறார் அப்பாவி பாரதி ராஜா. அதே சமயம் இதே குரங்கு பொம்பை பை பாரதிராஜாவின் மகனான விதார்த்தின் கையில் கிடைப்பதும். அதே பையை லபக்க ஆசைப்படும் ஜேப்படி திருடன், கூடவே விதார்த் விரும்பும் பொண்ணுடனான காதல் என கொஞ்சம் ரவுண்டு கட்டும் கதையை படு ஷார்ப்பாக இரண்டே மணி நேரத்தில் சொல்லி அசத்தி இருக்கிறார்கள் இயக்குநர் நித்திலன்.

கமல், ரஜினி-க்கே குரு ஸ்தானத்தில் இருந்த பாரதிராஜா, சில கேரக்டர்களில் நடித்திருந்தாலும் இந்த குரங்கு பொம்மை அவரது நடிப்புலக வாழ்வில் ஒரு மணி மகுடம் என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் படத்தின் நாயகனான விதார்த்-ஐ அவுட் ஆஃப் போகஸாகி விட்ட இவரின் ஆக்டிங்கிற்கு அவார்ட் நிச்சயம் தேடி வரும். விதார்த் தன் பங்கை பர்பக்டாக வெளிகாட்டி கவர்ந்திருக்கிறார். நாயகி டென்சா நிறைவு.

பாரதிராஜாவுக்கு அடுத்த இடத்தை பிடிப்பவர் தயாரிப்பாளரான தேனப்பன்தான். அடேங்கப்பா இம்புட்டு நடிப்புத் திறமையை எம்புட்டு நாளாய அடக்கி வைத்திருந்தாரோ? இந்த கு. பொ மூலம் நம் சினிமாவுக்கு அட்டகாசமான தமிழ் வில்லன் கிடைத்து விட்டார். பிக் பாக்கெட் & நகைச்சுவை நடிகராக வலம் வரும் கல்கி-க்கு கோலிவுட்டில் தனி ட்ராக் வர வாய்ப்பிருக்கிறது.

படம் தொடங்கியதில் இருந்தே கொஞ்சம் கூட தொய்வில்லாமல் போன கதையின் க்ளைமாக்ஸில் வில்லனுக்கு கிடைக்கு தண்டனை – ஹாட்ஸ் ஆப்

மொத்தத்தில் – குரங்கு பொம்மை- கோலிவுட்டின் கோபுர கலசங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.

மார்க் 5 / 3.5

error: Content is protected !!