ஷோலே மாதிரி படமாக்கும் “ கருப்பு ராஜா வெள்ளை ராஜா”! – விஷால் மகிழ்ச்சி!

ஷோலே மாதிரி படமாக்கும் “ கருப்பு ராஜா வெள்ளை ராஜா”! – விஷால் மகிழ்ச்சி!

தேவி’, ‘போகன்’, விரைவில் வெளியாகவிருக்கிற ‘சில சம்யங்களில்’ மற்றும் படப்பிடிப்பில் இருந்து வரும் ‘வினோதன்’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபு தேவாவின் ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் ஐந்தாவது படம் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’. பிரபுதேவா இயக்கும் இந்த படத்தில் கார்த்தி, விஷால் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகியாக சாயிஷா நடிக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ‘வனமகன்’ படத்தில் ‘ஜெயம்’ ரவியுடன் கதாநாயகியாக நடித்து வரும் சாயிஷா தமிழில் நடிக்கும் இரண்டாவது படம் இது.

1

‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ கதையை மறைந்த இயக்குனர் கே.சுபாஷ் எழுதியுள்ளார். பிரபுதேவா இயக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை சமீர் ரெட்டி கவனிக்கிறார். திரைக்கதை மற்றும் வசனத்தை சுபா எழுதுகின்றனர். ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் பிரபுதேவாவும், டாக்டர் கே.கணேஷும் இனைந்து தயாரிக்கும் இப்படம் வன்முறைக்கும் அன்புக்கும் இடையில் நடக்கும் கதையாம். இதில் கார்த்தி, விஷால் இருவருக்கும் சமமான கதாபாத்திரங்களாம்! விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

சமீபத்தில் நடந்த நடிகர் சங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கட்டிட நிதிக்காக நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் விஷால் இணைந்து 10 கோடி ரூபாய் தருவதாக கூறியிருந்தனர். அதற்கான முதல் முயற்சியாக 10 கோடி ரூபாய் திரட்டுவதற்காக இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற முயற்சிகள் தொடரும் என்று நடிகர் விஷால் நேற்று நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நேற்றைய பிரஸ் மீட்டீல் விஷால் மேலும் பேசிய போது, “பதவிகள் முன்பெல்லாம் நடிகர் விஷாலை மேடைக்கு அழைக்கிறோம் என்பார்கள். தற்போது பதவிகளை சொல்லும்போது பயமாக இருக்கிறது. பதவிகளை எல்லாம் சொல்லி உன் பெயரை கூப்பிட்டால் வயசானவன் மாதிரி இருக்கும் என்று கார்த்தி சொன்னான். பயம் பதவிகளை சொல்லி கூப்பிடும் போது எல்லாம் பயமாக இருக்கிறது. வெடி படத்திற்கு பிறகு நானும் பிரபுதேவா மாஸ்டரும் மீண்டும் சேர்ந்து பணியாற்றுகிறோம். பிரபுதேவா பிரபுதேவா மாஸ்டருடன் பணியாற்றுவது அருமையான அனுபவம். இரண்டு ஹீரோக்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ள படம் இது. இது போன்ற படம் வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

2

முன்னொரு காலத்தில் வந்த ஷோலே மாதிரி வரப் போகும்  இந்த படத்தின் கதையை தந்த சுபாஷ் சார் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு நன்றி. அவரது இறுதி நாட்களில் டயாலிசிஸ் செய்தபோது கூட இப்படி ஒரு அருமையான கதையை தந்துள்ளார். கார்த்தி சயீஷா வனமகன் படப்பிடிப்பில் டான்ஸ் ஆடியபோது நானும் கார்த்தியும் பார்த்தோம். பிரபுதேவாவின் ஆவி அவருக்குள் புகுந்தது போன்று ஆடினார். கார்த்தி, நீ செத்த. கார்த்தியும், சயீஷாவும் சேர்ந்து ஆடும் பாடல் உள்ளது. சயீஷா சயீஷா மாதிரி ஒரு பொண்ணு ஆடி நான் பார்த்து இல்லை. சிம்ரன் ஆடியுள்ளார். அதன் பிறகு வேறு யாரும் அப்படி ஆடிப் பார்க்கவில்லை. வனமகன் படத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். ரூ. 10 கோடி நடிகர் சங்க கட்டிடம் கட்ட நானும், கார்த்தியும் ரூ. 10 கோடி தருகிறோம். இந்த படம் மற்றும் எதிர்காலத்தில் நடிக்கும் படங்களில் இருந்து கிடைக்கும் பணத்தை கட்டிடம் கட்ட கொடுப்போம்”என்று தெரிவித்தார்.

error: Content is protected !!