பில்லி , சூனியம் , ஏவல் செய்யும் பிளாக் மேஜிசியன்தான் காஷ்மோரோ!

பில்லி , சூனியம் , ஏவல் செய்யும் பிளாக் மேஜிசியன்தான் காஷ்மோரோ!

ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு , எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் காஷ்மோரா. இப்படத்தை இயக்குநர் கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் , படத்தொகுப்பு சாபு ஜோசப் , கலை ராஜீவன். இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் இன்று அக்டோபர் 7 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. காஷ்மோரா படம் தீபாவளி வெளியிடாக திரைக்கு வருகிறது.

kasmoro oct 7

இப்படத்தில் வரும் காஷ்மோரா கதாபாத்திரம் இயக்குநர் கோகுலின் கடுமையான உழைப்பால் உருவானது. இந்த கதாபாத்திரத்தை உருவாக்க இயக்குநர் கோகுல் அதிக காலம் எடுத்து கொண்டு மிகவும் ஆழமாக ஆராய்ந்து இப்பாத்திரத்தை படைத்துள்ளார். ஏனென்றால் இப்பாத்திரம் மிகவும் புதுமையானது , தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கையிலெடுக்காத ஒரு கதாபாத்திரம்.

ஆம் , காஷ்மோரா என்பவன் இது வரை தமிழ் சினிமாவில் யாரும் ஆழமாக சொல்லாத , தொடாத பில்லி , சூனியம் , ஏவல் போன்றவற்றை செய்யும் பிளாக் மேஜிசியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்பாத்திரம் ராஜ் நாயக் பாத்திரத்தில் இருந்து முற்றிலும் வேறுபாடும். நிச்சயம் இதை ரசிகர்கள் மிகபெரிய அளவில் ரசிப்பார்கள் என்றார் கார்த்தி.

error: Content is protected !!