நள்ளிரவு விசாரணைக்கு பின் வெளிநாடு சென்றார் கார்த்தி சிதம்பரம்

நள்ளிரவு விசாரணைக்கு பின் வெளிநாடு சென்றார் கார்த்தி சிதம்பரம்

மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நள்ளிரவு விசாரணைக்கு பின் வெளிநாடு பறந்து சென்றார்.

கார்த்தி சிதம்பரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு விசாரணைக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் ஐரோப்பாவுக்கு பறந்தார். கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் மீது ஜூன் 28ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 26ஆம் தேதி ஸ்பெயினில் இருந்து திரும்பிய பின்னர், ஜூன் 28-ம் தேதி வருமான வரித்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராவதாக கார்த்தி சிதம்பரம் எழுதி கொடுத்திருப்பதால், அவர் மீது பிறப்பிக்கப்பட்ட வாரண்ட்டை ரத்து செய்யக்

கூடாது என வருமான வரித்துறை நிலைக்குழுவின் மூத்த அதிகாரியான ஏ.பி.ஸ்ரீனிவாஸ் கூறினார். இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் கோரி கார்த்தி தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏ.டி. ஜகதீஷ் சந்திரா ஒத்தி வைத்தார்.

சிதம்பரத்தின் மனைவி நளினி, மகன் கார்த்தி மற்றும் மருமகள் ஸ்ரீநிதி இணைந்து, அறிவிக்கப்படாத வெளிநாட்டு வருமானத்தின் (கருப்பு பணம்) மூலம் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஜில் 5.35 லட்சம் இங்கிலாந்து பவுண்டுக்கு அசையா சொத்துகள் சேர்த்ததாக வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.

இந்த மூவரும் வருமான வரித்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி 3 முறை சம்மன் அனுப்பியும் வரவில்லை. இதை அடுத்து வருமான வரித்துறைக்கு வழங்கப்பட்டுள்ள சிவில் நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்டு, வரிவிதிப்பு சட்டத்தின் பிரிவு 8 (1) இன் கீழ் கார்த்தி சிதம்பரத்தை மட்டும் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையில், ஸ்பெயினுக்கு தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை காலை செல்ல கார்த்தி ஏற்பாடு செய்திருந்தார். அவருக்கு எதிராக தொடரப்பட்ட வேறு வழக்குகளில் வெளிநாட்டிற்கு செல்ல நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சுற்றுப்பயணத்தின் போது, அந்த கைது வாரண்ட் பயன்படுத்தப்பட கூடுமோ என்ற அச்சத்தில், அவரது ஆலோசகர் சனிக்கிழமை இரவு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை அணுகினார்.

தலைமை நீதிபதியின் அனுமதியுடன் அவசரகால முன்ஜாமீன் மனுவை, கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஜகதீஷ் சந்திரா முன்பு சமர்ப்பித்தார். பின்னர் நீதிபதி ஜகதீஷ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நள்ளிரவு விசாரணை நடத்தப்பட்டது.

Related Posts

error: Content is protected !!