கர்நாடகா தேர்தல் 2018: காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் ரிலீஸ்! – AanthaiReporter.Com

கர்நாடகா தேர்தல் 2018: காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் ரிலீஸ்!

காவிரி சர்ச்சைக்கு காராணமான நம் அண்டை மாநிலமான கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு ஆளும் கட்சியான காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி 218 பேர் கொண்ட வேட்பாளர் பட்டிய லை வெளியிட்டுள்ளது. இதில் முதல்வர் சித்தராமையா சாமுண்டிஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

2008 முதல் சித்தரா மையா போட்டியிட்ட வருணா தொகுதியில் இந்த முறை அவரது மகன் யதீந்திரா போட்டியிடு கிறார். கட்சியின் மாநில தலைவர் பரமேஷ்வரா கடந்த முறை தோல்வியடைந்த  கொரடிகீர் தொகுதியிலேயே இந்த முறையும் களமிறங்குகிறார். சர்ச்சைக்குரிய அமைச்சரான டிகே சிவகுமார் கனகாபுரா தொகுதியில் நிற்கிறார்.

காங்கிரஸ் தனது முழு வேட்பாளப் பட்டியலை வெளியிட்டதை தொடர்ந்து பாஜகவும் தனது 2ம் கட்ட பட்டியலை விரைவில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.