Google டூடுளில் தோன்றும் Dr.கார்ல் லேண்ட் ஸ்டினர்!

Google டூடுளில் தோன்றும் Dr.கார்ல் லேண்ட் ஸ்டினர்!

இவர்தான் ரத்த பிரிவுகளைக் கண்டறிந்தவர் கூடவே போலியோ வைரஸை கண்டறிந்தவரும் இவரே,

maxresdefault

இவரை மேலும் கொஞ்சம் அறிவோமா?

ஒரு மனிதனுக்கு தேவைப்படும் ரத்தத்தை யாரோ ஒரு மனிதனிடமிருந்து எடுத்து இன்னொரு மனிதனின் உடலுக்குள் செலுத்தி விட முடியாது என்ற உண்மையை முதல் வெற்றிகரமான ரத்த ஏற்றத்திற்கு பிறகு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கழித்துத்தான் கண்டறிய முடிந்தது, அதாவது ரத்தத்தில் குழுக்கள் அல்லது வகைகள் (Blood Group) உண்டு என்ற உண்மை 1875-ஆம் அண்டு கார்ல் லேண்ட் ஸ்டினர் என்பவர் கண்டறிந்தார்.

கார்ல் லேண்ட் ஸ்டினர் 1868-ல் ஜூன் 26-ல் ஆஸ்திரிய நாட்டில் பிறந்து பின்பு அமெரிக்க குடியுரிமை பெற்றவர். மருத்துவம் மற்றும் வைராலஜி துறையில் அக்காலகட்டங்களில் வாழ்ந்த தலைசிறந்த நிபுணர்களில் ஒருவர் ஆவார். 1930-ஆம் அண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ல் லேண்ட் ஸ்டினர் 1875-களிலேயே ரத்தத்தில் குழுக்கள் அல்லது வகைகள் இருக்கிறது என்று கண்டறிந்துவிட்டாலும் ஆதாரபூர்வமாக 1901-ஆம் ஆண்டுதான் A, B, O ஆகிய பிரிவுகள் இருப்பதாக ஆதார பூர்வமாக கார்ல் லேண்ட் ஸ்டினரால் அறிவிக்க முடிந்தது இதற்க்கிடையில் டாக்டர்.டெகாஸ் டெல்லோ மற்றும் ஸ்ட்ரூலி என்ற இரு மருத்துவர்கள் A, B, O ஆகிய ரத்த பிரிவுகளுக்கு அடுத்ததாக நான்காவதாக AB என்ற அறிய ரத்தப்பிரிவு ஒன்று உள்ளதை கண்டறிந்தனர், இந்த உண்மையை கண்டறிந்த பின்னரும் கூட ரத்தஏற்றம் என்பது 100% பாதுகாப்பானதாக உணரப்படவில்லை,

ரத்தஏற்றத்தை 100% பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்ற வேட்கையுடன் களம் இறங்கிய கார்ல் லேண்ட் ஸ்டினர் தனது தீவிர ஆராய்ச்சியை தொடர்ந்தார், இதன் பலனாக 1939-ஆம் அண்டு ரத்தத்தை பற்றி மேலும் ஒரு உண்மையை கண்டறிந்தார், அதுதான் Rh பேக்டர். ஒருவரது ரத்தத்தில் இந்த Rh பேக்டர் இருந்தால் அது பாசிடிவ் வகை ரத்தப்பிரிவு என்றும் Rh பேக்டர் இல்லையென்றால் அது நெகடிவ் வகை இரத்தப்பிரிவு என்றும் உணரப்பட்டது.

உதாரணமாக ஒருவரது ரத்தப்பிரிவு A, என்று வைத்துக் கொண்டால் அவரது ரத்தத்தில் இந்த Rh பேக்டர் காணப்பட்டால் அது A+, என்றும் Rh பேக்டர் இல்லையென்றால் A- என்றும் கண்டறியப்பட்டது. இங்கு உங்களுக்க ஒரு புள்ளி விபரத்தை கூறி அசத்தலாம் என்று விரும்புகிறேன், இந்தியாவில் பாசிடிவ் வகை ரத்தபிரிவினரே அதிகம், வாசிக்கும் உங்களில் சிலர் நெகடிவ் பிரிவு ரத்தத்தை சார்ந்தவர் என்றால் உங்கள் ரத்தப்பிரிவு எளிதில் கிடைக்காத ஒரு ரத்தப்பிரிவு ஆகும் ஆகையால் நீங்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவும்.

டாக்டர். கார்ல் லேண்ட் ஸ்டினரின் Rh பேக்டரை கண்டறிந்த பிறகுதான் ரத்தஏற்றம் என்பது 100% பாதுகாப்பானதாக உணரப்பட்டது, மேலும் ரத்தஏற்றத்திற்கு பிறகு உடலில் ஏற்படும் விளைவுகளை பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்து பல்வேறு கட்டுரைகளையும், முடிவுகளையும் உலக மருத்துவத்துரைக்கு வழங்கியதோடில்லாமல் மனித இனத்திற்கு போலியோ நோயை உண்டாக்கும் போலியோ வைரஸ்களை கி.பி.1909-ல் கண்டறிந்ததும் பேருதவியாற்றினார்.

error: Content is protected !!