கமலா சட்டோபாத்தியாயா!

கமலா சட்டோபாத்தியாயா!

இவர் ஒரு இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்.

இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டதற்காகவும் நினைவு கூரப்படுகிறார்.

மேலும் இந்திய கைவினைப் பொருள்கள், கைத்தறி வளர்ச்சி, சுதந்திர இந்தியாவில் நாடக மறுமலர்ச்சி ஆகியவற்றிற்கு உந்து சக்தியாக இருந்தார்.

கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாகவும், இந்திய பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்தவர்.

சங்கீத நாடக அகாடெமியின் துணைத்தலைவர்,

பாரதீய நாட்டிய சங்கத்தின் தலைவர்,

அகில இந்திய கைவினைஞர்கள் வாரியத் தலைவர்,

யுனெஸ்கோவின் உறுப்பினர் எனப் பல பதவிகளை வகித்து சிறப்பாகப் பணியாற்றியவர்.

மேலும் சிறு (14) வயதில் திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் கணவனை இழந்தார். பின்னர் சென்னை குயின் மேரீசில் படிக்கும் போது பழகியவரை மறு மணம் செஞ்சிக்கிட்டார். இந்த விதவை திருமணத்திற்கு சமூகத்தில் எதிர்ப்பு கடுமையாக இருந்துச்சு

அப்பாலே பல்வேறு எதிர்ப்பு மற்றும் சர்ச்சைக்களுக்கிடையே சினிமாவில் நடிச்சு வந்தார்.

மேலும் இரண்டாவது வூட்டுகாரரிடமிருந்தும் பிரிந்து டைவோர்ஸ் அப்ளை வாங்கி வாங்கினார். இதுவும் அக்காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திச்சு.

பின்னாளில் சுதந்திர போராட்டத்தில் கலந்து பல்வேறு சமூக சேவைகள் புரிந்து வந்தார்.

மேலும் இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண் ஆவார்.

இவரது பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசு பத்ம பூசன் விருதை 1955இல் அளித்தது. பின்னர் இரண்டாவது மிக உயரிய விருதான, பத்ம விபூசன் விருதை 1987லிலும், ராமன் மகசேசே விருதை 1966இல் பெற்றார்.

கமலா சட்டோபாத்தியாயா  காலமான நாளின்று

 

 

error: Content is protected !!